உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி பேட்டி: தி.மு.க., அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சமத்துவ, சமூக மேம்பாட்டு செயல் திட்டங்களால்,தமிழக மக்கள், முதல்வருக்கான சிம்மாசனத்தைவழங்கியுள்ளனர். அ.தி.மு.க., பொதுக்குழுவில் தன் குரலை உயர்த்தி, கைகளை சுழற்றி பேசினால், மக்களை ஏய்த்து, தி.மு.க.,வை வீழ்த்தி விடலாம் என, பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார் பழனிசாமி. ஆட்சிக்காகவும்,அதிகாரத்திற்காகவும், சசிகலா துவங்கி பன்னீர்செல்வம் வரை ஒவ்வொருவரின் காலை வாரிவிட்ட நீண்ட துரோக வரலாறு அவருடையது.

பன்னீர்செல்வம் வரை ஒவ்வொருவரின் காலை வாரிவிட்ட நீண்ட துரோக வரலாறு அவருடையது.

தன்னை வளர்த்த அ.தி.மு.க.,வுக்கு துரோகம் பண்ணிட்டு,தி.மு.க.,வுக்கு தாவிய இவர், பழனிசாமியை விமர்சிக்கலாமா? முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை: பள்ளி, கல்லுாரிகள், பொது இடங்களில்புழக்கத்தில் இருந்த போதைப்பொருட்களின் நடமாட்டம், தற்போது சிறைகளிலும் புகுந்துவிட்டது. சிறையில் போதைப்பொருட்கள் புழக்கத்துடன், மொபைல் போன் வாயிலாக வெளியாட்களுடன் பேசி கொலைக்கு திட்டமிடுவதும் நடக்கிறது. இவற்றை தடுப்பதில் முதல்வர் தனி கவனம் செலுத்தி, சிறைத் துறையை சீர்மிகு துறையாக மாற்ற வேண்டும்.சீர்மிகு துறையாக மாறுதோ, இல்லையோ... புது குற்றவாளிகளை உருவாக்கும் கூடங்களா சிறைகள் மாறாம இருந்தாலே பெருசு!தமிழக காங்., பொதுச்செயலர் காண்டீபன் பேச்சு: முன்னாள்மத்திய அமைச்சர் இளங்கோவன்மறைவுக்கு, டில்லி மேலிட தலைவர்கள் யாரும் வரவில்லை என, எதிர் கோஷ்டி தரப்பில் வீண் பழியை சுமத்துகின்றனர்.தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார்,இளங்கோவன் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.இளங்கோவன் மனைவிக்கு ராகுல் இரங்கல் கடிதம் அனுப்பிவைத்து ஆறுதல் கூறியுள்ளார். அது சரி... ராகுல் இரங்கல் கடிதம் அனுப்பியதே பெருசுன்னு சொல்றாரோ?எம்.ஜி.ஆர்., மக்கள் இயக்க தலைவர் லியாகத் அலிகான்பேச்சு: அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், தி.மு.க.,வைவீழ்த்த வேண்டும் என, துடியாய்துடிக்கிறார். தமிழகத்தில் பா.ஜ.,ஆட்சியை கொண்டு வர அவர்பா.ஜ.,வின் ஊதுகுழலாக செயல்படுகிறார். மத்திய அரசின்ஆதிக்கத்தில் உள்ள பல்வேறுவழக்குகளில் இருந்து தப்பிக்க,தன் சுயநலத்திற்காக, தமிழகத்தில் பா.ஜ., ஆட்சியைஉருவாக்க கனவு காண்கிறார்.தி.மு.க., - அ.தி.மு.க.,வுடன் சேர முடியாத அவருக்கு இருக்கிற ஒரே வழி பா.ஜ., தான்... வேற என்ன செய்வார் பாவம்?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Anantharaman Srinivasan
டிச 20, 2024 12:56

சட்டத் துறை அமைச்சர் ரகுபதிக்கு தன் முதுகிலிருக்கும் அழுக்கு தெரியல.. பழனிசாமியை ஏசுகிறார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை