தமிழக பா.ஜ., சமூக ஊடக பிரிவு மாநில பார்வையாளர் அர்ஜுனமூர்த்தி அறிக்கை: பா.ஜ.,வின்
எதிர் அரசியல்வாதிகள், எட்டு திக்கும் அம்பேத்கர் பெயரையும், படத்தையும்
தாங்கி பிடிக்கின்றனர். இந்நேரத்தில், தமிழகத்தில் அம்பேத்கர் சிலைகளை
பூட்டியிருக்கும் கம்பி வேலிகளிடம் இருந்து எப்போது விடுவிப்போம் என்ற
கேள்வி எழுகிறது. ஓங்கி ஒலிக்கும் குரல்கள், அதற்காக ஒலித்தால், சமத்துவம்
ஊர்ஜிதப்படுத்தப்படும்.அம்பேத்கரை கம்பி வேலிக்குள் பூட்டியது பா.ஜ.,வா இருந்திருந்தால், இந்நேரம் ருத்ரதாண்டவம் ஆடியிருப்பாங்களே! எம்.ஜி.ஆர்., மக்கள் இயக்க தலைவர் லியாகத் அலிகான் பேச்சு: 'அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடைமையடா' என்று பாடிய எம்.ஜி.ஆர்., வழியில் செயல்படும் திராவிட மாடல் அரசை நாங்கள் வாழ்த்துகிறோம். சமத்துவம், சமநீதி, சுயமரியாதை, பெண்ணுரிமைபோன்ற கொள்கைகளை பாதுகாக்கும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலானதி.மு.க., அரசுக்கு, எம்.ஜி.ஆர்., தொண்டர்கள் துணையாக இருந்து, ஜாதி, மத பேதங்களை எதிர்த்து நிற்பதற்கு சூளுரைப்போம்.'தி.மு.க., தீய சக்தி' என முழங்கிய எம்.ஜி.ஆரின் தொண்டர்கள் தி.மு.க.,வை ஆதரிக்க வாய்ப்பே இல்லை!பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேட்டி: 'தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவேன்' எனக் கூறி, ஆட்சிக்கு வந்த தி.மு.க., அரசு தற்போது கடன் வாங்குவதிலும், வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதிலும் முதன்மை மாநிலமாக முன்னேறியுள்ளது. தமிழகம், 8.34 லட்சம் கோடி கடனுடன் முதலிடம் பிடித்துள்ளது. வட்டி கட்டுவதில், 54,676 கோடி ரூபாயுடன் முதலிடத்தை தக்க வைத்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால், தமிழக அரசு திவாலாகி விடும்.ஒருவேளை, கடன் வாங்குறதுலயும் முதன்மை மாநிலமா மாறணும்னு நினைச்சுட்டாங்களோ?கோவை தெற்கு தொகுதி பா.ஜ., -- எம்.எல்.ஏ., வானதி அறிக்கை: கோவையில், 58 பேர் படுகொலைக்கும், 200 பேர் உடல் உறுப்புகளை இழந்து, வாழ்விழக்க காரணமாகவும் இருந்த கோவை குண்டுவெடிப்பு தண்டனை கைதி பாஷா மரணமடைந்தார். அவருக்கு மத முறைப்படி, இறுதி நிகழ்வு நடந்ததை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால், இறுதி ஊர்வலம் நடத்த தி.மு.க., அரசு அனுமதி அளித்தது தான் அதிர்ச்சி அளிக்கிறது.'ஏன் அனுமதி கொடுத்தோம்'னு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கொடுத்த விளக்கத்தை கேட்டு இன்னும் அதிர்ச்சி ஆகி இருப்பீங்களே?