பேச்சு, பேட்டி, அறிக்கை
கடலுார் காங்., - எம்.பி., விஷ்ணுபிரசாத் பேட்டி: நெய்வேலியில் விமான நிலையம், பண்ருட்டி ரயில் நிலையத்தில் வெளியூர் ரயில்கள் நிறுத்தம், மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல் அமைத்தல் போன்ற பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன். இந்தியாவின் முன்மாதிரி தொகுதியாக, கடலுார் தொகுதியை மாற்ற வேண்டும் என்பது கனவு திட்டமாக உள்ளது.
மாற்ற வேண்டும் என்பது கனவு திட்டமாக உள்ளது.
வெளியூர்க்காரரான நீங்க, கடலுாரை பட்டா போட்டுக்க முடிவு பண்ணிட்டது நல்லாவே தெரியுது... அந்த ஊர் காங்கிரசார், தொகுதியை மறந்துட வேண்டியது தான்! தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பேட்டி: அண்ணா பல்கலை மாணவி பாலியல் பலாத்கார பிரச்னையில், தெய்வம் நின்று கேட்கும். அப்போது அந்த சார் யார் என்பது அனைவருக்கும் தெரியும். தமிழக மக்களை தி.மு.க., ஏமாற்றுவதாக த.வெ.க., தலைவர் விஜய் கூறியுள்ளார். அருமை நண்பர் விஜய்க்கு இப்போது தான் தெரிகிறதா? தி.மு.க., ஆட்சிக்கு வந்த ஓராண்டு காலத்திலேயே இது தெரிந்து விட்டதே.விஜய் மட்டும் கட்சி துவங்காம இருந்திருந்தா, மக்களை தி.மு.க., ஏமாற்றுவது கடைசி வரைக்கும் அவருக்கு தெரிஞ்சிருக்காது!அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும்போது மட்டும், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, நேரலை துண்டிக்கப்படுவது, ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதையே ஒளிபரப்ப குற்றவாளிகள் போல் நடுங்கும் ஆட்சியிடம், என்ன வெளிப்படைத் தன்மையை நாம் எதிர்பார்க்க முடியும்.அதானே... 'ஆளுங்கட்சிக்கு எதிரான குரல்களை ஒடுக்குவது பாசிசம்'னு மத்திய அரசை திட்டுறவங்களும், அதே தப்பை தானே பண்றாங்க!முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: சட்டசபை கூட்டத்தொடரை நடத்தி முடித்து விட்டால் போதும் என, படாதபாடு பட்டது ஆளும் தி.மு.க., என்றால், பரபரப்பை உருவாக்க, விவாதிப்பதா, இல்லை வெளிநடப்பு செய்வதா எனும் குழப்பத்தோடு, கருப்பு சட்டை, பேட்ஜ் என நாடக பாணியில் அ.தி.மு.க.,வும் நடந்து கொண்டது. மொத்தத்தில் சட்டசபை சம்பிரதாயங்களால் ஆன சத்த சபையாகி, மக்களின் அபிமானத்தை இழந்து வருகிறது என்பதே உண்மை.அந்த, 'சத்த சபை'யில், இவரது தலைவர் பன்னீர்செல்வம் உருப்படியா எதையாவது பண்ணியிருக்கலாமே!