உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை: நவ. 12

பேச்சு, பேட்டி, அறிக்கை: நவ. 12

தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிக்கை: 'மாநில உரிமைகள் என்றாலே தமிழகம்' என, இந்திய அளவில் நமக்கு இருக்கும் பெருமையை, அற்ப அரசியலுக்காக சிதைத்திருக்கிறது த.வெ.க., அரசு. மாநில சுயாட்சி, கவர்னர்கள் அதிகாரம், மொழிக் கொள்கை உள்ளிட்ட, 10 முக்கிய விவகாரங்களை ஆராய்ந்து, பரிந்துரைகளை வழங்குவதற்காக, தி.மு.க., ஆட்சியில் அமைக்கப்பட்ட குரியன் குழு கலைப்புக்காக, இந்தியா முழுதும் இருந்து, அறிவார்ந்த ஆன்றோர் தெரிவித்து வரும் கண்டனங்களே, த.வெ.க.,வின் இழிவான அரசியலை அம்பலப்படுத்தி விட்டன. இதுபோன்ற பல குழுக்களை, உங்க தந்தை கருணாநிதி ஆட்சியிலும் அமைச்சாங்களே... அதனால, ஏதாவது பலன் கிடைச்சுதா? பா.ஜ., தமிழக செயலர் வினோஜ் செல்வம் அறிக்கை: தமிழகம் முழுதும் உரிமம் பெற்ற பத்திர எழுத்தர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பத்திரப்பதிவுத் துறை சேவைகளை, தனியார் நிறுவனங்களிடம் அரசு ஒப்படைக்க இருப்பதாகவும், இதனால், பத்திர சேவைகளை சார்ந்துள்ள லட்சக்கணக்கான எழுத்தர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கூறுகின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தை, அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். எல்லாத்தையும் தனியாரிடம் தள்ளி விட்டால் தான், பத்திரப்பதிவுத் துறை யில் புழங்கும் லஞ்சத்தை ஒழிக்க முடியும்; தரமான சேவை கிடைக் கும்னு, அரசு கணக்கு போடுதோ? இந்திய கம்யூ., கட்சியின் தமிழக செயலர் வீரபாண்டியன் பேட்டி:சட்டம் - ஒழுங்கு பிரச்னையில், தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தீபாவளி திரு நாளில், பல கொலைகள் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் உள்ளிட்டவற்றை தடுக்க, முதல்வர் விஜய் தனி கவனம் செலுத்த வேண்டும். பெரும்பாலான கொலைகள் போதையால் தான் நடந்துள்ளன... போதையை, அதாவது, 'டாஸ்மாக்' கால் ஏற்படும் பிரச்னைகளை சரி செய்ய முயன்றாலே, சட்டம் - ஒழங்கு சரியாகிடும்! பா.ஜ., தமிழக நட்சத்திர பேச்சாளரும், நடிகையுமான கஸ்துாரி பேட்டி: 'எந்த பிரச்னை என்றாலும், முதல்வர் கண்டுகொள்ளவே மாட்டார். அவர் கல்யாணம், 'கார் ரேஸ்' என, ஜாலியாக சுத்துவார்' என மக்கள் பேச தொடங்கி விட்டனர். தேர்தல் பிரசாரத்தில், 'எல்லா தொகுதிகளிலும் விஜய் தான் வேட்பாளர்; அனைத்து தொகுதிகளிலும் விஜய்க்கு ஓட்டு அளியுங்கள்' என்றல்லவா விஜய் சொன்னார். அப்படியானால் எல்லா தொகுதிகளிலும் நடக்கும் பிரச்னைகளுக்கு அவர் தானே பொறுப்பு! சொல்லும் போது எல்லாமே எளிதாகத் தான் தோன்றும்; காரியத்தில் இறங்கும்போது தான், பிரச்னைகளின் தீவிரம் தெரியும். விஜய், பிரச்னைகளின் தீவிரத்தை அனுபவிக்க துவங்கி இருக்கிறார்; பார்ப்போம், என்ன நடக்கிறதென்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை