வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சம்பந்தா சம்பந்தமிலாமல் ஏதோ பேசி விட்டு போய் விடுவது நல்ல பேச்சா? இப்படி எல்லாம் இவர்களைக் கேட்டால் ஒரு நல்ல படிப்பு இல்லாதோர் என்ன சொல்வர்?
தி.மு.க., ஆதரவு பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேச்சு: சிறிய நாடான கொலம்பியா, அமெரிக்க விமானத்தை தரையிறக்க முடியாது என அறிவிக்கிறது. ஆனால், வல்லரசு என கூறும் மோடியால், ஏன் அமெரிக்காவின் அதிக வரி விதிப்பை எதிர்க்க முடியவில்லை. இந்தியர்களை காலில் விலங்கிட்டு அனுப்பி வைத்தனர் அமெரிக்கர்கள். அது இன்று வரை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு தெரியவில்லை. நயினார் நாகேந்திரன், பழனிசாமிக்கு வசந்த மாளிகையில் விருந்து அளிக்கிறார். கூச்சம் இல்லாமல் குற்ற உணர்வு இல்லாமல் சாப்பிடுகிறார் பழனிசாமி. இந்தியர்கள் காலில் விலங்கு போட்டதுக்கும், பழனிசாமிக்கும் என்ன சம்பந்தம்...? மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுறாரே! தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா பேச்சு: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு, 2011ல் வெற்றியை தந்து, எதிர்க்கட்சி தலைவராக்கியது ரிஷிவந்தியம் தொகுதி. பின்தங்கிய தொகுதியாக இருந்த ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த் வெற்றி பெற்றதும், பல திட்டங்களை நிறைவேற்றி, தமிழகத்தின் முதன்மை தொகுதியாக மாற்றினார். விஜயகாந்தின் ஆசியுடன், ரிஷிவந்தியம் தொகுதியில் மீண்டும் தே.மு.தி.க., வெல்லும். கூட்டணி கட்சிதானே, இவங்களுக்கு தொகுதிகளை ஒதுக்கணும்... இவங்களா தேர்வு செய்து கொண்டால், யார் ஏத்துக்குவாங்க? அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேட்டி: மதுரை, திருநெல்வேலி, காஞ்சிபுரம், சென்னை என, எல்லா மாநகராட்சிகளிலும் ஊழல் நடந்து, தி.மு.க., அரசு துருப்பிடித்த தகரமாக இருக்கிறது. எல்லா நகராட்சிகளிலும் ஊழல் நடக்கிறது. தி.மு.க., எங்கே இருக்கிறதோ அங்கே ஊழல் இருக்கிறது என்று அர்த்தம். தி.மு.க.,வினர் நடத்தும் மருத் துவமனைக்கு சென்றால், கிட்னியை காணோம் என்ற நிலையை பார்க்க முடிகிறது. தி.மு.க., - எம்.எல்.ஏ.,வோ சொகுசு கார் வாங்க கிட்னியைதான் திருட வேண்டும் என்கிறார். இப்படி பகிரங்கமா பேசிய எம்.எல்.ஏ., மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏன்னு தெரியலையே! அரக்கோணம் தொகுதி தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகன் பேச்சு: முதல்வர் ஸ்டாலின், வாரத்திற்கு இரண்டு நாட்கள், தன் சொந்த தொகுதியான சென்னை, கொளத்துாருக்கு வருகிறார். வேறு எந்த முதல்வரும் சொந்த தொகுதிக்கு வருவதில்லை. ஜனநாயகத்தை காக்கக்கூடிய ஒரே தலைவர் நம் முதல்வர் மட்டும் தான். மற்ற மாநில தேர்தல் அறிக்கையில், தமிழகத்தில் உள்ள தேர்தல் அறிக்கையை பார்த்து தான் திட்டங்களை சேர்க்கின்றனர். ஆனா, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மட்டும், தமிழகத்தை, 'காப்பி' அடிக்காம, கொடுத்த வாக்குறுதிகளை கச்சிதமா நிறைவேற்றிடுறாங்களே!
சம்பந்தா சம்பந்தமிலாமல் ஏதோ பேசி விட்டு போய் விடுவது நல்ல பேச்சா? இப்படி எல்லாம் இவர்களைக் கேட்டால் ஒரு நல்ல படிப்பு இல்லாதோர் என்ன சொல்வர்?