உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

ம.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டுள்ள மல்லை சத்யா அறிக்கை: நம் எண்ணங்களை பிரதிபலிக்கும், நாம் துவக்க போகும் புதிய கட்சியின் கொடியை, மலேஷிய நாட்டின் அடையாளங்களில் ஒன்றான இரட்டை கோபுரம் முன், என்னுடன் மலேஷிய பயணத்தில் பங்கேற்ற சுப்பிரமணி, தேசிங்குராஜா ஆகிய இருவரும் உயர்த்தி பிடித்து போட்டோ எடுத்தனர். சுற்றுலா வந்தவர்கள் பார்த்து பரவசம் அடைந்து, 'இது எந்த நாட்டின் கொடி' என கேட்டு, அவர்களும் அதை பிடித்து போட்டோ எடுத்து சென்றனர். இந்த கொடியை தமிழகத்தின் பட்டி தொட்டி முதல் பட்டினம் வரை அறிமுகம் செய்வோம். நல்லா பண்ணுங்க... அப்படியே, உங்க புதிய கட்சிக்கு உறுப்பினர்களையும் தேடி பிடியுங்க! மா.கம்யூ., கட்சியின் மாநில செயலர் சண்முகம் அறிக்கை: அரியலுார் மாவட்டம், பாலக்கரையில், 100 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை தனியார் ஆக்கிரமித்து இருப்பதை கண்டித்தும், மக்கள் பயன்பாட்டிற்கு பொதுப்பாதையை மீட்டெடுக் கவும் நடத்திய போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சி யினரையும், பொதுமக்களையும் இழிவாக பேசி, தாக்குதல் நடத்திய போலீஸ் துறையினர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சிக்கே இந்த கதி என்றால், எதிர்க்கட்சிகளின் நிலை பரிதாபம் தான்! தி.மு.க., ஆதரவாளரான நடிகர் எஸ்.வி.சேகர் பேட்டி: கரூரில், 41 பேர் இறந்த பின், 36 மணி நேரம் கழித்து நடிகர் விஜய் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதுவரை, 'ரிகர்சல்' பார்த்தாரா என, தெரியவில்லை. 'என்னை வேண்டுமானால் எதுவும் செய்யுங்கள் சி.எம்., சார்' என, சொல்கிறார். இது ஒரு நடிப்பாகத்தான் பார்க்கப்படுகிறது. அவரது அரசியல் அறிக்கையை யும், சினிமாவில் இருப்பவர்கள் தான் எழுதி தர்றாங்ளோ, என்னவோ? தமிழக பா.ஜ., உறுப்பினரான, வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அறிக்கை:கரூர் துயர சம்பவத்திற்கு, அவர் தான் காரணம், இவர் தான் காரணம் என, மாறி மாறி கைகாட்டி அறிக்கை விடுகின்றனர். ஆனால், என்ன பயன். போன உயிர்கள் திரும்ப வந்து விடுமா? இந்த பரிதாபகரமான உயிரிழப்புகளை கருத்தில் கொண்டு, சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து, 'இனி வரும் காலங்களில், தமிழகத்தில் எந்த ஒரு சாலையிலும் கூட்டம் அல்லது நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தக்கூடாது' என்ற உத்தரவை பிறப்பிக்க வேண்டும். வாஸ்தவம் தான்... 'சாலைகள் என்பது வாகனங்கள் செல்வதற்கு மட்டுமே... அரசியல் கட்சிகளுக்கான மைதானங்கள் அல்ல' என்பதை உறுதிப் படுத்தணும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ