மேலும் செய்திகள்
விஜயுடன் கூட்டணி அமைக்க ஆர்வம் காட்டும் கட்சிகள்
16-Sep-2025
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: காவிரி டெல்டாவில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், அங்கேயே தேங்கி கிடக்கின்றன. கடந்த சில நாட்களாக பெய்த மழையில், நெல் மூட்டைகள் நனைந்து வீணாகி விட்டன. புதிதாக அறுவடை செய்யப்படும் நெல்லில், 25 சதவீதம் ஈரப்பதம் உள்ளது. மத்திய அரசு விதிகளின்படி, 17 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் செய்ய முடியும். எனவே, 25 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய, தமிழக அரசு நடவடி க்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுப்பாங்களோ, இல்லையோ...? மத்திய அரசு மீது பழிபோட இதை ஒரு வாய்ப்பா பயன்படுத்திக்குவாங்க! விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி: கரூரில் நடந்த துயர சம்பவம், எந்த கட்சி கூட்டத்தில் நடந்திருந்தாலும் வருத்தம் அளிக்கும்; இதில், யாருக்கும் உள்நோக்கம் இருப்பதாக கூற முடியாது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு, 1 கோடி ரூபாய் வழங்க கோரிக்கை வைத்தேன்; ஆனால், நிதிநிலை யை கருத்தில் கொண்டு, முதல்வர், 10 லட்சம் ரூபாய் அறிவித்தார். உயிரிழந்த குடும்பத்தினரின் வாழ்க்கை தரம் உயர, அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். நீங்க கேட்ட, 1 கோடி ரூபாயை தான் தரலை... 'அட்லீஸ்ட்' அரசு வேலையாவது தர்றாரான்னு பார்க்கலாம்! தமிழக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பொதுச்செயலர் சி.எம்.ராமலிங்கம் அறிக்கை: த.வெ.க., தலைவர் விஜய், காங்கிரசுடன் கூட்டணி வைத்தால், காங்கிரஸ் கட்சிக்கு நல்லது. அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தால், த.வெ.க.,வுக்கு ரொம்ப நல்லது. விஜய் யாருடன் கூட்டணி வைத்தாலும், தி.மு.க.,வுக்கு தான் ஆபத்து. அதே சமயம், விஜய் தனித்து போட்டியிட்டால், அவரது கட்சியின் ஓட்டு சதவீதத்தின் பலத்தை தெரிந்து கொள்ளலாம். விஜய் மட்டுமல்ல... எல்லா கட்சிகளும் தனித்து போட்டியிட்டா, அவங்களது ஓட்டு சதவீதம் எனும் சாயம் வெளுத்து போயிடும்... அதுக்கு பயந்து தானே, கூட்டணி எனும் குடைக்குள்ள ஒதுங்குறாங்க! புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி: தமிழகத்தில் உள்ள பன்னாட்டு தொழிற்சாலைகளில், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். இதற்காக, தமிழக அரசு ஒரு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, வரும் 16ம்தேதி துாத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். துாத்துக்குடியே கிடுகிடுக்கும் அளவில் ஆர்ப்பாட்டத்தை நடத்தி காட்டினால் தான், இவரது கட்சியை பெரிய கட்சிகள் கூட்டணிக்கு கூப்பிடும்!
16-Sep-2025