உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து பேட்டி: தமிழக சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து, பெரிய கட்சிகளே இன்னும் முடிவு எடுக்கவில்லை. லோக்சபா தேர்தலில் நாங்கள்பா.ஜ., கூட்டணியில் இருந்தோம். அதில் தொடர்வது குறித்து முடிவு செய்யவில்லை. காலம் தான் பதில் சொல்லும். கூட்டணிகுறித்து, பொதுக்குழு கூட்டி முடிவு செய்யப்படும். அது சரி... அ.தி.மு.க., - பா.ஜ., அணிக்கு விஜய் வந்தால் தான், தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வது என்ற கொள்கையில் இருக்காரோ? விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேச்சு: முதல்வர், அமைச்சராவது எல்லாம் எளிதல்ல; கட்சியின் தலைவராக இருந்தாலும், முதல்வராக முடியாது. அரசியலில் சாதிக்க தலைமை பண்பு அவசியம். ஒரு கட்சியை துவங்கி, தலைவர் என அறிவித்தால் மட்டும், தலைமைத்துவம் பெற முடியாது. அரசியல் என்பது மக்களுக்கு தொண்டு செய்யும் களம். பதவி வெறி, அரசியலுக்கான தகுதி இல்லை. பதவி வெறி சரியல்ல' என்கிறாரே... அப்படி என்றால், இவர் எம்.பி.,யாகாம, அந்த சீட்டை கட்சிக்காரருக்கு கொடுத்து, எம்.பி.,யாக்கி இருக்கலாமே! தி.மு.க., துணை பொதுச் செயலர் கனிமொழி பேட்டி: வட மாநிலங்களில் தேர்தல் வந்து விட்டால் தமிழகத்தையும், தமிழர்களையும் எதிரியாக சித்தரித்து, வெறுப்புவாத அரசியல் செய்வது பா.ஜ.,வுக்கு வாடிக்கை. ஒடிஷா சட்டசபை தேர்தலில் இதையே தான் செய்தனர். ஆனால், கொரோனா தொற்றின்போது, யார் தங்களை நடக்க விட்டு கொடுமைப்படுத்தியது என்பதும், அந்த நேரத்தில் எவ்வாறு தமிழகம் தங்களுக்கு உதவியது என்பதும், அந்த தொழிலாளர்களுக்கு நன்கு தெரியும். வட மாநில தொழிலாளர்களை, 'பானி பூரி விற்கிறவங்க'ன்னு மட்டம் தட்டியது யாராம்? மா.கம்யூ., மாநில செயலர் சண்முகம் பேட்டி: 'தமிழகத்தில், பீஹார் மாநில தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுகின்றனர்' என்ற கொடூரமான குற்றச்சாட்டை பிரதமர் மோடி முன்வைத்திருக்கிறார். பீஹார் மட்டுமல்ல, மேற்கு வங்கம், ஒடிஷா, உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து, 50 லட்சத்திற்கும் மேலான வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் வேலை செய்கின்றனர். அவர்களுக்கு வாழ்க்கை வழங்கக்கூடிய மாநிலமாக தமிழகம் இருக்கிறது. 'தி.மு.க.,வினர் துன்புறுத்து றாங்க' என்று தானே பிரதமர் பேசினார்... ஆனா, ஒட்டுமொத்த தமிழர்களையும் சொல்லிட்டதா, இவர், 'பிளேட்'டை திருப்பி போடுறாரே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை