மேலும் செய்திகள்
நீதிமன்றத்தை நாட வேண்டியது தானே?
26-Oct-2025
கடலுார், காங்., - எம்.பி., டாக்டர் விஷ்ணு பிரசாத் பேச்சு:தி.மு.க.,விடம் எந்த தொகுதிகளை வாங்க வேண்டும் என நாம் தேர்வு செய்யும் பட்டியலுடன், எந்த தொகுதிகளை வாங்கக் கூடாது என்ற பட்டியலையும் தயார் செய்ய வேண்டும். முக்கியமாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில், காங்கிரஸ் போட்டியிடுவதை தவிர்க்க வேண்டும். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் பண பலத்துக்கு முன்னாடி, காங்., தாக்கு பிடிக்காதுன்னு, இப்பவே பயப்படுறாரோ? அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில இணை செயலர், டாக்டர் சரவணன் அறிக்கை: மத்திய அரசின், 'துாய்மை இந்தியா இயக்கம்' மூலம் ஆண்டுதோறும் துாய்மையான நகரங்கள் பற்றி ய கணக்கெடுப்பு நடக்கும். அ.தி.மு.க., ஆட்சியில் பழனிசாமி முதல்வராக இருந்த போது, துாய்மையான நகரங்கள் பட்டியலில், 42வது இடத்தில் மதுரை இருந்தது. 2024 -- 25ம் ஆண்டில், அசுத்தமான நகரங்கள் பட்டியலில், முதலிடத்தில் மதுரை உள்ளது. இரண்டாம்இடத்தில் பஞ்சாபின் லுாதியானாவும், மூன்றாம் இடத்தில் சென்னை நகரமும் உள்ளது. எதற்கெடுத்தாலும், 'தமிழகத்தின் திராவிட மாடலை அனைத்து மாநிலங்களும் பின்பற்றுகின்றன' என, தம்பட்டம் அடிக்கும் முதல்வர் ஸ்டாலின், இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? அந்த இரண்டாவது இடத்தை, லுாதியானாவுக்கு ஏன் விட்டுக் கொடுத்துட்டாங்கன்னு தெரியலையே! துாத்துக்குடி, தி.மு.க., - எம்.பி., கனிமொழி பேட்டி: திருநெல்வேலி சட்டசபை தொகுதிக்கான, 'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சியில் நானும் இருந்தேன். 'வெற்றி பெறவில்லை என்றால் நிர்வாகிகளின் கட்சி பதவிகள் பறிக்கப்படும்' என, யாரிடமும் முதல்வர் சொல்லவில்லை. 'வெற்றி பெற வேண்டும்; அதற்காக அனைவரும் ஒருமித்து பாடுபட வேண்டும்' என்று தான் முதல்வர் கூறினார். இப்படி, இவங்க கருத்தைக் கேட்டு, திருநெல்வேலி, தி.மு.க.,வினர் தேர்தல் பணியில் அலட்சியமா இருந்துடப் போறாங்க! மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்கத்துறை அமைச்சருக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலர் ரவிகுமார் எம்.பி., கடிதம்: ஐ.எஸ்.ஐ., என, சுருக்கமாகஅறியப்படும், இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் சட்டத்தை ரத்து செய்து விட்டு, அதை அரசாங்க பிரதிநிதிகள் கொண்ட அமைப்பாக மாற்றி அமைப்பதற்கு, புதிய சட்ட மசோதா ஒன்றை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. அந்த நிறுவனத்தின் தன்னாட்சி தன்மையை கெடுப்பதாக, இந்த மசோதா இருக்கிறது. எனவே, இந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். மசோதாவை திரும்ப பெறவில்லை என்றால், வி.சி., சார்பில், டில்லியில், 'மாபெரும்' போராட்டத்தை நடத்த வேண்டியது தானே!
26-Oct-2025