உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை /  பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

கன்னியாகுமரி காங்., - எம்.பி., விஜய் வசந்த் அறிக்கை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், காங்கிரஸ் ஆட்சியின் போது, 2006ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் வாயிலாக, இந்தியாவின் ஊரக பொருளாதாரம் மேம்பட்டதுடன், லட்சக்கணக்கான மக்கள், ஏழ்மையின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். பா.ஜ., ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து, இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய நிதியை படிப்படியாக நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிதியை உடனே விடுவிக்க வேண்டும். பார்லிமென்டில் இந்த விவகாரத்தை பேசாமல், அமளியில் இறங்கி அதை முடக்கிட்டு, வெளியில் வந்து இப்படி அறிக்கை விட்டால் பிரச்னை தீர்ந்துடுமா?மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மாநில செயலர் சண்முகம் அறிக்கை: இன்சூரன்ஸ் துறையில், அன்னிய முதலீட்டை, 100 சதவீதமாக உயர்த்துவதென மத்திய அரசு முடிவு செய்திருப்பது கண்டனத்துக்குரியது. 'இந்திய இன்சூரன்ஸ் துறையை, பன்னாட்டு மூலதனத்திற்கு முழுமையாக திறந்து விட வேண்டும்' என்பது, அமெரிக்காவின் நீண்ட கால நிர்ப்பந்தம். இதற்கு, பா.ஜ., அரசு பணிந்து விட்டது. தேசிய கட்சியான மார்க்சிஸ்ட், இதை கண்டித்து நாடே கிடுகிடுக்கும் அளவில் போராட்டங்களை நடத்தி, மத்திய அரசின் முடிவை திரும்ப பெற வைக்கலாமே! தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொங்கு மண்டல அமைப்பு செயலர் செங்கோட்டையன் பேச்சு: டாக்டர் ஒருவரது திருமணத்திற்கு நான் சென்ற இடத்தில், கல்லுாரி மாணவர்கள், 50 பேர் என் அருகில் நின்று, தங்களது மொபைல் போனில் படம் எடுத்துக் கொண்டனர். 'ஏன் என்னுடன் படம் எடுக்கிறீர்கள்?' என, கேட்டதற்கு, 'நீங்கள் விஜயிடம் சென்று விட்டீர்கள். அதற்காகத்தான் உங்களை வாழ்த்துகிறோம்; உங்களுடன் படம் எடுக்கிறோம்' என, மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இதை கேட்டதும், எம்.ஜி.ஆர்., காலத்துக்கே திரும்பி போயிட்ட மாதிரி, இவர் ஏகத்துக்கும் உணர்ச்சிவசப்பட்டிருப்பாரே! பசுமை தாயகம் அமைப்பின் தலைவர், சவுமியா அன்புமணி பேச்சு: நடப்பாண்டு தீபாவளிக்கு, 800 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது. இந்த மது விற்பனை பணத்தில் தான், மகளிர் உரிமை தொகையை கொடுக்கின்றனர். மகளிருக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படுவதும், அது மீண்டும், 'டாஸ்மாக்' கடைக்கு வருவதும் இயல்பாக நடக்கிறது. தேர்தல் வரப்போவதால், 'மதுக்கடைகளை மூடினால் தான் ஓட்டு' என, தி.மு.க., வினரிடம் கூறுங்கள். 'மதுக்கடைகளை மூடினால், கள்ளச்சாராயம் பெருகிடும்'னு தி.மு.க.,வினர் சால்ஜாப்பு சொல்லுவாங்களே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை