வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பல கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்துள்ளோம் என பெருமையடிக்கும் திமுகயரசு உண்மையில் கோவில் நிதியில் மஞ்சள் குளித்து மக்களை ஏமாற்றி வருகிறது.
அ.தி.மு.க., மருத்துவ அணி இணை செயலர் டாக்டர் சரவணன் பேச்சு: கடந்த, 2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது, 2.15 கோடி குடும்பங்களுக்கு, தலா, 2,500 ரூபாயை அன்றைய முதல்வர் பழனிசாமி வழங்கினார். தற்போது, சட்டசபை தேர்தலை மனதில் வைத்து, ஒவ்வொரு குடும்பத்திற்கும், 10,000 ரூபாய் கொடுத்தால் கூட, தி.மு.க.,வுக்கு மக்கள் ஓட்டளிக்க மாட்டார். வரும் தேர்தலில், தி.மு.க.,வுக்கு, 'பொங்கலோ பொங்கல்' என்று கூறி வீட்டுக்கு அனுப்பி விட்டு, நாட்டிற்கு வெளிச்சம் தரும் பழனிசாமியை மக்கள் முதல்வராக்குவர். பொங்கல் பணம் என்பது, முன்பணம் தான்... தேர்தலப்ப, வாக்காளர்களை வளைக்க, தொகுதிக்கு, 40 கோடி ரூபாயை தி.மு.க.,வினர் எப்பவோ எடுத்து வச்சிட்டாங்களே!அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேட்டி: தமிழகத்தில் பாலியல் குற்ற சம்பவங்கள், ஆள் கடத்தல், போதை பொருள் நடமாட்டம், நில அபகரிப்பு போன்ற அராஜக செயல்கள் நடந்து வருகின்றன. இவற்றை தடுக்க, 2026ல் நடைபெறும் சட்டசபை தேர்தலில், தமிழக வாக்காளர்கள் ஓட்டு எனும் ஆயுதத்தால், ஸ்டாலின் அரசை வீட்டுக்கு அனுப்பி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை முதல்வராக்க வேண்டும். பலமான கூட்டணியுடன் இருக்கும் தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்ப, எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்தால் தான் முடியும். ஆனா, இவங்க கட்சி பொதுச் செயலர், யாரையுமே கிட்ட சேர்க்க மாட்டேங்கிறாரே! தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'தி.மு.க., ஆட்சியில், 3,177 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. இது, எந்த ஆட்சியிலும் நடக்காத சாதனை' என, தி.மு.க.,வினர் கூறுகின்றனர். கோவில் திருப்பணிகளுக்கு அரசு ஒரு ரூபாய் கூட செலவிடுவதில்லை. இன்னும் சொல்லப்போனால், கோவில் நிதியில் இருந்துதான், ஹிந்து சமய அறநிலையத்துறை ஊழியர்களுக்கு சம்பளமே வழங்கப்படுகிறது. ஏதோ வானத்தை வளைத்தது போல், தி.மு.க.,வினர் பேசுகின்றனர். இதுக்கெல்லாம் பெருமை அடிக்கிறவங்க, 'டாஸ்மாக்' மது விற்பனை, 50,000 கோடி ரூபாயை, தங்களது சாதனையா சொல்றது இல்லையே! ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் அறிக்கை: வங்கதேசத்தில் தொன்மையான ஹிந்து கோவில்கள் இடிக்கப்படுகின்றன; அங்கு, இனப்படுகொலை நடக்கிறது. பாலஸ்தீன முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள், குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சியினர், வங்கதேச சிறுபான்மை ஹிந்துக்களை பாதுகாக்க, குரல் கொடுக் காமல் மவுனம் காக்கின்றனர். இதுபோன்ற மவுன சாமியார்களுக்கு, வரும் தேர்தலில், பெரும்பான்மை ஹிந்துக்கள் பாடம் புகட்டுவாங்களா?
பல கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்துள்ளோம் என பெருமையடிக்கும் திமுகயரசு உண்மையில் கோவில் நிதியில் மஞ்சள் குளித்து மக்களை ஏமாற்றி வருகிறது.