உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை /  பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

பசுமை தாயகம் தலைவர் சவுமியா பேச்சு: தர்மபுரியில் ஆண்டுக்கு, 1,050 கோடி ரூபாய்க்கு ஆண்கள், 'டாஸ்மாக்'கில் மது குடிக்கின்றனர். இதில், 650 கோடி ரூபாய் செலவு செய்தால் போதும்; இந்த மாவட்டத்துக்கு காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்றலாம். ஆனால், ஆளும் கட்சியினர், மகளிருக்கு, 1,000 ரூபாய் உரிமைத்தொகை கொடுத்து ஏமாற்றுகின்றனர். 'டாஸ்மாக்'கில் வாங்கி, உங்களுக்கு கொடுக்கின்றனர். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை சீரழிக்கும் மதுக்கடைகளை மூடச் சொல்லும் அன்பு மணிக்கு, பெண்கள் துணையாக இருக்க வேண்டும். 'எங்கிருந்து வந்ததோ அங்கேயே சென்றது' என்ற கீதையின் தத்துவப்படி, பெரும்பாலான குடும்ப பெண்கள் வாங்கும், 1,000 ரூபாயைக்கூட, சில ஆண்கள் பறித்து, திரும்பவும், 'டாஸ்மாக்'கில் குடுத்துடுறாங்களே!தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி: இந்தியாவில் இருக்கும் மத்திய அமைச்சர்கள், பா.ஜ., ஆளும் மாநில அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் எல்லாம் தமிழகத்துக்கு படையெடுக்கட்டும். தமிழகம் ஒருபோதும் பா.ஜ.,வுக்கான மண் இல்லை. பா.ஜ.,வை ஒருபோதும் தமிழ் மண்ணில் கால் ஊன்ற தமிழ் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். தி.மு.க., தலைமையிலான கூட்டணிக்கு, 45 சதவீதம் ஓட்டு வங்கி உள்ளது. இது, 50 சதவீதமாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது. கடந்த, 2021 சட்டசபை தேர்தலப்பவும் இதைத்தான் சொன்னீங்க... ஆனாலும், பா.ஜ.,வில் நாலு பேர் எம்.எல்.ஏ.,க்கள் ஆகிட்டாங்களே... இந்த நாலும், வர்ற தேர்தலில், 40 ஆகாதுன்னு உறுதியா சொல்ல முடியுமா? அகில பாரத ஹிந்து மகா சபா தேசிய துணை தலைவர் பாலசுப்பிரமணியம் பேட்டி: ஹிந்து மகா சபா சார்பில் தமிழகத்தில், 120 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை, மார்ச் முதல் வாரத்தில், சென்னை கூட்டத்தில் தேசிய தலைவர் சுவாமி சக்கரபாணி மகராஜ் அறிமுகம் செய்வார். இந்த 120 பேரும், தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்துவாங்களா? தே.மு.தி.க., இளைஞர் அணி செயலர் விஜய பிரபாகரன் பேச்சு: நம் கட்சியினர் இன்னும் சிறிது நாள் பொறுமையாக இருக்க வேண்டும். கூட்டணி குறித்து நல்ல அறிவிப்பு வெளியாகும். சத்திரியனாக இருப்பதை விட சாணக்கியனாக இருக்க வேண்டும். எனக்கோ, என் குடும்பத்தினருக்கோ, எம்.எல்.ஏ., - எம்.பி., மற்றும் அமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை இல்லை. கட்சிக்காக உழைத்த ஒவ்வொருவரையும், எம்.எல்.ஏ., - எம்.பி., ஆக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அப்படின்னா, 'வர்ற தேர்தலில் நானோ, எங்க குடும்பத்தினரோ போட்டியிட மாட்டோம்'னு வெளிப்படையா அறிவிச்சுட வேண்டியது தானே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை