உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை /  பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரசாத் அறிக்கை: மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராக, தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து அவதுாறு பிரசாரம் செய்து வருகிறார். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, 'அனைத்து மொழிகளும் கற்கலாம்' என்ற முற்போக்கான, தலைசிறந்த கொள்கையின் மூலம், ஆந்திர மாணவர்களை உலகத்தரம் வாய்ந்தவர்களாக உருவாக்கி வருகிறார். சந்திரபாபு நாயுடு அப்படி முற்போக்குவாதியாக இருப்பதால் தான், 'கூகுள்' நிறுவனம், 1.30 லட்சம் கோடி ரூபாயில், செயற்கை நுண்ணறிவு தரவு மையம் அமைக்க, ஆந்திராவை தேர்வு பண்ணியிருக்கு! தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனின் மருமகள் சங்கீதா பேச்சு: என் மாமனார் மருத்துவமனையில் இருந்தபோதும், 'காட்பாடிக்கு போனியா... அங்க வேலை எல்லாம் முடிந்ததா' என்று, என் கணவர் கதிர் ஆனந்திடம் கேட்டார். 'ஓய்வு எடுங்கள்' என கூறியபோதும் கேட் காமல், காட்பாடி தொகுதி மக்களை பற்றியே சிந்தித்தார். ரொம்ப கஷ்டப்பட்டு முன்னேறியவர் அவர். அவரது செல்வாக்கே, காட்பாடி மக்கள் தான். மக்கள் பணிகளை செய்ய அவர் தயங்க மாட்டார். ஆனா, எல்லாமே தேர்தல் நேரத்தில் மட்டும் தான்... ஜெயித்து சென்னைக்கு போயிட்டார்னா, தொகுதி மக்களை பத்தி அடுத்த தேர்தலின் போது மட்டும் தான் சிந்திப்பாரு! அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் டெல்டா மண்டல கண்காணிப்பாளருமான கு.ப.கிருஷ்ணன் பேட்டி: எங்கள் கட்சியினரின் துல்லியமான பிரசாரத்தால், எத்தனையோ குடும்பத்தில் உள்ள குழந்தைகள், பெரியவர்களை த.வெ.க.,வுக்கு ஓட்டு போட வைத்துள்ளனர். இந்த தேர்தல் முடிவில், பிரெஞ்ச் புரட்சியை விட மோசமான புரட்சி நடைபெற போகிறது. அது சரி... பிரெஞ்ச் புரட்சி பத்தி எல்லாம் பேசுறாரே... அந்த பிரெஞ்ச் புரட்சி எதுக்காக, யாரால் நடத்தப்பட்டது என்ற வரலாறு எல்லாம், இவரது கட்சி தலைவர் விஜய்க்கு தெரியுமா? தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி: ஓட்டுக்கு பணம் கொடுப்பதை நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் தப்பு; வாங்குவதும் தப்பு. தி.மு.க.,வினர் ஓட்டுக்கு பணம் கொடுத்தனர் என்ற தகவலை முழுமையாக மறுக்கிறேன். ஆதாரமின்றி இந்த குற்றச்சாட்டை சுமத்த வேண்டாம். அவ்வாறு இருந்தால், மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் புகார் கொடுத்திருக்கலாம். இந்த நுாற்றாண்டின் பெரிய நகைச்சுவை இதுவாகத்தான் இருக்கும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Anantharaman Srinivasan
ஏப் 25, 2026 11:30

இந்தமுறை துரைமுருகன் காட்பாடியில் உருண்டு பிரண்டு தான் ஜெயிக்க வேண்டியிருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை