உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை /  பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

விருதுநகர் காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர் பேட்டி:தி.மு.க., ஆட்சியின் தவறுகளால் தான் போலீஸ் துறையின், 'இன்ஜின்' பழுதாகி நிற்கிறது. அதை சரிசெய்ய புதிய அரசு முயற்சிக்கிறது. அதற்கு அவகாசம் கொடுக்க வேண்டும். மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜியின் மருமகனும், அக்கட்சி லோக்சபா எம்.பி.,யுமான அபிஷேக் பானர்ஜி தாக்கப்பட்ட தற்கு கண்டனம் தெரிவிக்காமல், தி.மு.க., அமைதி காப்பது வேடிக்கையாக உள்ளது.அபிஷேக் மீது பா.ஜ.,வினர் தாக்குதல் நடத்தியதா மம்தா குற்றம்சாட்டியிருக்காங்க... தமிழகத்தில், காங்., உட்பட எல்லா கூட்டணி கட்சிகளும் தி.மு.க.,வை கைகழுவிட்டதால, பா.ஜ.,வை இனி தி.மு.க., பகைச்சுக்குமா என்பது சந்தேகம் தான்!பா.ஜ., சிறுபான்மை அணி தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம் அறிக்கை: தமிழக வக்ப் வாரிய சொத்துக்களில், நில அபகரிப்பு அதிகம் நடக்கிறது. சொத்துக்களை பெரிய நிறுவனங்களுக்கு, குறைந்த வாடகைக்கு விட்டு, அந்த பலனை ஜமாத் நிர்வாகிகள் பெறுகின்றனர். ஏழை முஸ்லிம்களுக்கு எந்த பயனும் இல்லை. 'ஆக்கிரமிப்பை மீட்க வேண்டும்' என நீதிமன்றமே கூறியும், மீட்கவில்லை. மத்திய அரசு கொண்டு வந்த வக்ப் வாரிய திருத்த சட்டத்தை, தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும். சிறுபான்மையினர் ஆதரவால ஜெயித்திருக்கும் த.வெ.க., அரசு, ஏழை முஸ்லிம்கள் முன்னேற்றத்துக்கான வக்பு வாரிய திருத்த சட்டத்தை அமல்படுத்தணும்! பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:நடப்பாண்டு போதிய விலை கிடைக்காததால், மாம்பழங்கள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. பல இடங்களில் விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்த மாம்பழங்களை சாலையோரங்களில் கொட் டும் அவல நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர். எனவே, பழச்சாறு, ஜாம் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க, அரசு மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் மாம்பழங்களை நேரடியாக வாங்க வேண்டும். மாம்பழ விவசாயி களுக்கு சிறப்பு நிவாரண தொகை வழங்க வேண்டும். 'மாம்பழ விவசாயிகளின் கசப்பான வாழ்க்கையை இனிக்க வைங்க'ன்னு கேட்கிறாரோ? சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி பேட்டி:கடந்த 2004ல் இருந்து, 2014 லோக்சபா தேர்தல் தவிர, அனைத்து தேர்தல்களிலும் தி.மு.க.,வுடன் இருந்தோம். சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின், நாங்கள் உடன் இருந்தாலும் தி.மு.க.,வால் ஆட்சி அமைக்க முடியாது. த.வெ.க.,வுடன் சென்றால், தமிழகத்தில் ஐந்து ஆண்டுகள் நிலையான ஆட்சி அமையும் என்று கருதியே அவர்களுடன் சேர்ந்தோம். 'அமைச்சர் பதவி தந்தாங்க; போனோம்'னு சொல்றதை விட் டுட்டு, இப்படி சுத்திவளைக்கணுமா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Anantharaman Srinivasan
ஜூன் 08, 2026 20:02

தேன் உண்ணும் வண்டு மாம்பழத்தைக்கண்டு என்பதுபோல் அப்பனும் பிள்ளையும் ஜகஜாலா கில்லாடிகள். சந்தடி சாக்கில் ஒரு பந்தை பிஜேபி பக்கமும் தட்டிவிடுவான் கார்த்திக் சிதம்பரம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை