உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை /  பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன் பேட்டி: ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற பரந்த நோக்கத்தில், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைய துணை நின்றிருக்கிறோம். இம்முடிவை தி.மு.க.,வினர் சிலர் விமர்சித்து வருகின்றனர். இதற்கு எதிராக, நம் கட்சியினர் கடும் சொற்களை பயன்படுத்தி வருவது வருத்தம் அளிக்கிறது. விமர்சனங்களை தவிர்த்து, புதிய அரசின் வாயிலாக, சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய பணிகளை கடமை உணர்வோடு மேற்கொள்ள வேண்டும். அண்ணாதுரை, கருணாநிதி காலம் தொட்டு தி.மு.க.,வின் கிளை கழகமாவே செயல்பட்ட நீங்க, சட்டுன்னு முகாம் மாறியதை தி.மு.க.,வினரால ஜீரணிக்க முடியலையோ?புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி அறிக்கை: விவசாயம் என்பது ஓரிருவர் உழைப்பால் உருவாகக்கூடியது அல்ல. எண்ணற்றவர்களின் கூட்டு உழைப்பால் கிடைப்பதை வீணடிக்கக் கூடாது. உற்பத்தியான அனைத்து விளைபொருட்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, வேளாண்மை துறைக்கு உள்ளது. மாங்கூழ் உற்பத்தி ஆலைகளில் கூட மாம்பழங்களை போதிய விலை கொடுத்து வாங்குவதில்லை. அடிப்படை விலையை நிர்ணயம் செய்து, அரசே கொள்முதல் செய் ய வேண்டும். விளைபொருட்களை சாகுபடி செய்வதை விட, அவற்றை பத்திரமாக பாதுகாப்பது தான் பெரிய சவால்! பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: தமிழகத்தில், ஜூலை முதல் மின் கட்டணம் உயரும் என்று வரும் செய்திகள், பொதுமக்கள், தொழில் துறையினருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் மின் கட்டணத்தை உயர்த்தினால், விலைவாசி கடுமையாக உயரும்; தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படும். மின் வாரியத்தின் நிதி நிலையை மேம்படுத்துவதற்கு பதிலாக, கட்டணத்தை உயர்த்துவதை ஏற்க முடியாது. மின் வாரியத்துக்கு 2.47 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிற சூழல்ல, கட்டணத்தை உயர்த்தாம சமாளிக்க முடியுமா? மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் பேட்டி: சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின், சில கட்சிகளில் இருந்து சிலர் அணி மாறுகின்றனர். எங்கள் கட்சியில் இருந்தும் சிலர், தங்கள் எதிர்காலம் கருதி விலகியுள்ளனர். அதற்கு, 'தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தது பிடிக்கவில்லை' என, காரணம் கூறுகின்றனர். லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைத்திருந்த போது, இது ஏன் அவர்களுக்கு தெரியவில்லை? லோக்சபா தேர்தலப்ப, கமலுக்கு ராஜ்யசபா, 'சீட்' தந்தாங்க... ஆனா, சட்டசபை தேர்தல்ல சீட்டே தராம, 'அல்வா' கொடுத்ததை தான் உங்க கட்சியினரால தாங்கிக்க முடியலை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை