உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை /  பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் அறிக்கை: காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பையும், 2018ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் மதிக்காமல், மேகதாதுவில் அணை கட்ட முனையும் கர்நாடக அரசுக்கு எதிராக, தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் தனி தீர்மானம் கொண்டு வந்து, அனைத்து எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவோடு நிறைவேற்றி இருப்பது பாராட்டுக்குரியது. தமிழகத்தின் நீர் உரிமையையும், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் மேகதாது விவகாரத்தில் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி, ஓரணியாக நின்ற எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் பாராட்டுகிறேன். இந்த எம்.எல்.ஏ.,க்கள்ல நம்ம கட்சியினர் ஒருத்தர் கூட இல்லையேன்னு இவருக்கு துளியும் வருத்தமில்லையா?தி.மு.க., செய்தி தொடர்பு குழு துணை தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை: எம்.எல்.ஏ.,க்களுக்கு பயிற்சி கொடுத்தது போல், முதல்வருக்கான பயிற்சிக்கு ஸ்டாலினை முதல்வர் விஜய் அணுகலாம். தி.மு.க.,வினர் ஓட்டுகளில் வெற்றி பெற்ற கட்சிகளின் தயவோடு ஆட்சி அமைத்திருக்கும் த.வெ.க., இதற்காக கூச்சப்படாமல் அறிவாலயத்தை அணுகலாம். இவர் சொல்வது மாதிரி சிறப்பான முதல்வராக ஸ்டாலின் செயல்பட்டிருந்தால், அவரது கொளத்துார் தொகுதியிலயே ஏன் தோற்று போயிட்டாரு? மா.கம்யூ., கட்சியின் மாநில செயலர் சண்முகம் அறிக்கை: கவர்னர் உரையில், 'திசை மாறி சென்ற வருவாயை அரசின் கருவூலத்திற்கு கொண்டு வரும் நடவடிக்கை, வேளாண் விளை பொருட்களுக்கு உரிய லாபகரமான விலை கிடைப்பதை உறுதி செய்தல், போதை பொருள் இல்லாத தமிழகம், நிர்வாகத்தில் வெளிப் படைத்தன்மை' போன்ற அறிவிப்புகளை வரவேற் கிறோம். கடந்த வருஷ தி.மு.க., அரசின் கவர்னர் உரையை வரவேற்று வெளியிட்ட அறிக்கையை நகல் எடுத்துட்டாரோ? திருச்சி ம.தி.மு.க., - எம்.பி., துரை வைகோ பேட்டி: தமிழகத்தின் நிதி நிலை குறித்து, த.வெ.க., அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ததில், 78,000 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை உள்ளதாகவும், 13 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளதாகவும் கூறியுள்ளது. இது, தமிழக வரலாற்றிலேயே அதிகபட்ச கடன் தொகை. இருந்த போதிலும் தற்போது, 75,000 ரூபாய் வரை பயிர் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. வர்ற 27ம் தேதி நடக்க இருக்கும் இவங்க கட்சியின் பொதுக்குழுவில், 'தமிழகத்தின் கடனை, முந்தைய தி.மு.க., அரசு ஏகத்துக்கும் ஏற்றியதை கண்டித்து, தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம்'னு தீர்மானம் போடுவாங்களோ?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை