உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை /  பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

விளாத்திகுளம் தி.மு.க., - எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் பேட்டி: பக்குவப்பட்ட அரசியல் தலைவர்கள் ஆண்ட தமிழகத்தில், வருங்கால சந்ததியினரை காக்க வேண்டிய பொறுப்பு, எதிர்க்கட்சியான எங்களுக்கு இருக்கிறது. எங்கு எதிர்க்கட்சியின் குரல் ஓங்கி ஒலிக்கிறதோ, அங்கு நாடு நன்றாக இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம். ஆனா, நீங்க ஆட்சியில இருந்தா மட்டும், எதிர்க்கட்சியினரின் குரலை ஓங்கி ஒலிக்க விடாம அமுக்குறதுல தான் ஆர்வம் காட்டுவீங்க!அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேச்சு: தமிழகத்திற்கு ரொட்டித் துண்டு கூட கொடுக்காதவர் தான் முதல்வர் விஜய். தமிழ் மண்ணிற்காக, தமிழ் இனத்திற்காக, நாட்டிற்காக போராட்டக் களத்திற்கு செல்லாத விஜய், பட்டினி போராட்டம் என்றால் என்ன என்று அறியாத விஜய், எந்தத் தியாகமும் செய்யாமல் முதல்வராக வந்திருக்கிறார் என்றால், அவருக்கு நடிக்கத் தெரிகிறது. அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு நடிக்கத் தெரியவில்லை. வசீகர வசியம், 'பஞ்ச் டயலாக்' பேசத் தெரியாததால், எங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. 'பஞ்ச் டயலாக்' பேசத் தெரிஞ்சிருந்தா மட்டும், ஆட்சியை பிடிச்சிருப்பீங்களாக்கும்...? முதல்ல கலகலத்து போய் கிடக்கிற கட்சியை கட்டியெழுப்ப பாருங்க! எஸ்.டி.பி.ஐ., கட்சியின் தேசிய தலைவர் பைஸி பேட்டி: தற்போது, அரசியல் கட்சிகளுக்கு அப்பாற் பட்டு இளைஞர்கள், மாணவர்கள் பா.ஜ.,வுக்கு எதிராக வலுவான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். மத்திய பா.ஜ., அரசில் கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதானின் ராஜினாமா மூலம், கடந்த 12 ஆண்டு கால ஆட்சியில், முதன்முறை யாக பா.ஜ., தோல்வியை சந்தித்து உள்ளது. அவர் முதல், 'விக்கெட்' எனில், இந்த ஆட்சி காலம் முடிவதற்குள் பா.ஜ., 'ஆல் அவுட்' ஆகும். மாணவர்கள் போராட்டங்களுக்கு மதிப்பளித்து, தர்மேந்திர பிரதான் ராஜினாமா பண்ணிட்டதால, நாடு முழுக்க பா.ஜ., மீதான மதிப்பும், மரியாதையும் அதிகரிச்சிருக்கு என்பது தான் உண்மை! இந்திய கம்யூ., மத்திய கட்டுப் பாட்டு குழு உறுப்பினர் முத்தர சன் பேட்டி: ஆண்டுக்கு, 177 டி.எம்.சி., தண்ணீரை தமிழகத்திற்கு கிடைக்காமல் செய்யும் வகையில், மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா முயற்சிக்கிறது. தமிழகத்தை வடிகாலாக பயன்படுத்த கர்நாடகா நினைக்கிறது. சென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்கள், குடிநீருக்காக காவிரி நீரை நம்பி தான் உள்ளன. மேகதாதுவில் அணை கட்டினால், தமிழகம் பாலைவனமாக மாறும். இந்த விவகாரத்தில், மத்திய அரசு நடுநிலையாக செயல்படாமல், கர்நாடகாவிற்கு ஆதரவாக செயல் படுகிறது. உங்களது முன்னாள் கூட்டணி பங்காளியான தி.மு.க., தரப்பு, காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசாம இருக்கே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Lakshminarasimhan
ஆக 13, 2026 07:24

ஆக மொத்தத்தில் இவர் கூற வருவது திமுக எதிர் கட்சியா இருப்பதுவே தமிழ் நாட்டிற்கு நல்லாட்சி கிடைக்கும் என்பது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை