உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை /  பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

காங்கிரசைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., பிரவீன் சக்கரவர்த்தி பேட்டி: தமிழகத்துக்கு, புதிய தலைமை செயலகம் கட்டாயம் தேவை; அதில் மாற்று கருத்து இல்லை. அதற்காக, எங்கு இடம் எடுத்தாலும், அங்கிருப்பவர்களுக்கு கொஞ்சம் பாதிப்பு வரத்தான் செய்யும். தலைமை செயலகம் சென்னையில் தான் இருக்க வேண்டும். அதனால் ஏற்படும் பாதிப்பையும், பலனையும் கணக்கெடுத்து முடிவு எடுக்க வேண்டும். எதிர்ப்பு வருவது இயல்பானது தான். எதிர்க்கட்சிகள் துாண்டி விடும் எதிர்ப்பாகவும் இருக்கலாம்; இயல்பான எதிர்ப்பாகவும் இருக்கலாம். இப்படி வளவளா, கொழகொழான்னு பேசக்கூடாது... பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டலாமா, வேண்டாமான்னு பளிச்சுன்னு சொல்லிடுங்க!கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் தொகுதி த.வெ.க., - எம்.எல்.ஏ., கனிமொழி சந்தோஷ் பேச்சு: த.வெ.க., அரசை விமர்சிக்கும் வகையில், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் வேலையை நடிகர் விஜய் சேதுபதி செய்துள்ளார். அவரது ஜாதக கட்டம் எனக்கு தெரியும்; அவருக்கு நேரம் சரியில்லை. இதோடு விட்டாருன்னா அவருக்கு நல்லது. மகாராஜா படத்திற்கு முன் அவர் எப்படி இருந்தார் என்பது எல்லாருக்கும் தெரியும். விஜய் சேதுபதி, யார் பெயரையும் குறிப்பிட்டு பேசவில்லையே... பிறகு ஏன், 'எங்கப்பா குதிருக்குள் இல்லை' என்பது போல நீங்க பொங்கி எழுறீங்க? பா.ஜ., தமிழக பொதுச் செயலர் ஏ.பி.முருகானந்தம் அறிக்கை: காங்., கட்சியைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தலில் பிரசாரம் செய்தார். அவர் சென்ற அனைத்து இடங்களிலும் பா.ஜ.,வுக்கு அமோக வெற்றி; நன்றி மீண்டும் வருக. அடுத்த ஆண்டு, தமிழகத்தில் நடக்கிற உள்ளாட்சி தேர்தலுக்கும், தற்போது நடக்கவுள்ள இடைத்தேர்தலுக்கும், ராகுல் வந்து சென்றால் போதும். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வெ ற்றி உறுதியாகி விடும். விட்டா, ராகுலுக்கு தனி விமானம், 'புக்' செய்து கொடுத்து, 'தமிழகத்துக்கு பிரசாரத்துக்கு வாங்க'ன்னு அழைப்பீங்க போலிருக்கே! அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை: த.வெ.க., அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழும் ஒவ்வொரு முறையும், பழைய சம்பவங்களை திரித்து பொய் பொய்யாக பேசி, தேவையில்லாத சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றனர். அதேபோல், எதிர்க்கட்சியினர் மீது சோதனை, கைது எனும் பெயரில் அதிகார அமைப்புகளை ஏவி, மக்கள் பிரச்னைகளை திசை திருப்புவதையே த.வெ.க., அரசு வாடிக்கையாக வைத்திருக்கிறது. தி.மு.க., முன்னாள் அமைச்சர் களின் இடங்களில் தானே சோதனைகள் நடத்துறாங்க... தி.மு.க.,வுக்கு எதிரணியில் இருக்கும் நீங்க, அவங்களுக்காக ஏன் வக்காலத்து வாங்குறீங்க?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !