உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை: த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை: த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை

பா.ஜ., விவசாய அணியின் தமிழக தலைவர் ஜி.கே.நாகராஜ் அறிக்கை: ‘ தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, ஸ்டாலின் ஆகியோர் தோற்றதற்கு காரணம், எஸ்.ஐ.ஆர்., பணிகளை செய்த தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தான்’ என, வி.சி.க., தலைவர் திருமாவளவன் சொல்கிறார். 11 லட்சம் அரசு பணியாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின், 25 லட்சம் நிர்வாகிகள் இணைந்து, வாக்காளர் பட்டியலை மூன்று முறை சரிபார்த்துள்ளனர். திருமாவளவன் இதை மறந்து பேசுகிறாரா... இல்லை மறைத்து பேசுகிறாரா? எது எப்படியோ... போலி வாக்காளர்களை நீக்கியதால் தான், இன்று வி.சி.க.,வுக்கு தமிழக அமைச்சரவையில் இடம் கிடைச்சிருக்கு என்பதை திருமாவளவன் மறக்கக்கூடாது! தி.மு.க., மூத்த வழக்கறிஞரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான வில்சன் பேச்சு: ‘எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீது தொடர்ந்துள்ள தேர்தல் வழக்கு, 45 நாட்கள் காலக்கெடுவுக்கு பின் தொடரப்பட்டுள்ளதால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கு நிலைக்கத்தக்கது அல்ல. தேர்தல் முடிவு வெளியான நாளையும் கணக்கில் கொண்டால், ஜூன் 17ம் தேதியன்று தேர்தல் வழக்கு தொடுத்திருக்க வேண்டும். ஆனால், ஒரு நாள் தாமதமாக ஜூன் 18ம் தேதி தொடரப்பட்டுள்ளதால், இந்த வழக்கை நிராகரித்து தள்ளுபடி செய்ய வேண்டும்’ என, உயர் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளேன். ஒரு நாள் தாமதத்துக்காக, ஜனநாயக நெறிமுறைகளை குழி தோண்டி புதைக்கணும்னு சொல்றீங்களா? காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பேட்டி: த.வெ.க., அரசு அமைந்து நான்கு மாதங்களாகியும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி வரவில்லை. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். உள்ளாட்சி தேர்தல் நடத்தாவிட்டால், மத்திய நிதி கமிஷனுடைய நிதி வராது. நகராட்சிகளும், ஊராட்சிகளும் பலவீனப்படும். உள்ளாட்சி தேர்தல் நடந்தால், த.வெ.க., கூட்டணியில் உங்க ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு வாங்கி தரலாம்னு நினைக்கிறீங்களோ?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை