புகார் பெட்டி
போக்குவரத்து நெரிசல்தியாகு முதலியார் தெருவில், ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால், வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.செல்வம், புதுச்சேரி.சாலையில் குப்பைகள்கோரிமேடு சிவாஜி நகரில், குப்பைகள் சாலையில் சிதறி கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.தமிழ்ச்செல்வி, புதுச்சேரி. நாய்களால் மக்கள் அச்சம்ரெட்டியார்பாளையம் கம்பன் நகரில், நாய்கள் அதிகமாக சுற்றி திரிவதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். கவிச்செல்வன், ரெட்டியார்பாளையம்.குண்டும், குழியுமான சாலைசுப்பையா சாலை ரயில் நிலையம் அருகே சாலை மிகவும் குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.பன்னீர், புதுச்சேரி.