உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

ஹைமாஸ் விளக்கு எரியுமா?

செட்டிப்பட்டு திரவுபதியம்மன் கோவில் எதிரில் உள்ள ஹைமாஸ் விளக்கு கடந்த ஒரு மாதமாக எரியவில்லை.ரேவிதன், செட்டிப்பட்டு.

வாய்க்கால் பணி கிடப்பில்

கண்டமங்கலம் மெயின் ரோடு, தெற்கு பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் கட்ட, பள்ளம் தோண்டி பல நாட்கள் ஆகியும் பணி நடக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.கஜபதி, கண்டமங்கலம்.

நாய்கள் தொல்லை

ஜீவானந்தபுரம் எம்.ஜி.ஆர்., வீதி 4வது, குறுக்கு தெருவில், நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். கலைச்செல்வி, ஜீவானந்தபுரம்.

குண்டும் குழியுமான சாலை

தவளக்குப்பம் அண்ணா நகரில், சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சிவா, தவளக்குப்பம்.

கொசு தொல்லை

கவுண்டன்பாளையம், அம்பாள் நகர் 5வது, குறுக்கு தெருவில், வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி இருப்பதால், கொசு தொல்லை அதிகமாக உள்ளது. பன்னீர்செல்வம், கவுண்டன்பாளையம்.

விபத்து அபாயம்

வில்லியனுார் சந்திப்பில், மாடுகள் சுற்றி திரிவதால், விபத்து ஏற்பட்டு வருகிறது.ரஜினி முருகன், வில்லியனுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை