உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

கழிவுநீரால் துர்நாற்றம்

உழவர்கரை கரோன் வீதியில், வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது.மேரி, உழவர்கரை.

நாய்கள் தொல்லை

நெல்லித்தோப்பு அண்ணா நகரில், சாலையில் நாய்கள் திரிவதால், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.பொற்செல்வி, நெல்லித்தோப்பு.

குண்டும் குழியுமான சாலை

அரியாங்குப்பம் ஓடைவெளி சாலை, குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து செல்கின்றனர்.கணேசன், அரியாங்குப்பம்.

ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா ?

நெல்லித்தோப்பு கங்கை அம்மன் கோவில் தெருவில், சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.ரவி, நெல்லித்தோப்பு.

சென்டர் மீடியன் அமைக்க வேண்டும்

வில்லியனுார் மூலக்கடை பகுதியில், பெரம்பை ரோடு விநாயகர் கோவில் எதிரில் வாகனங்கள் பிரிந்து செல்ல வசதியாக சென்டர் மீடியன் அமைக்க வேண்டும். ரஜினிமுருகன், வில்லியனுார்.

விதி மீறும் பஸ்களால் டிராபிக் ஜாம்

கடலுார் மார்க்கத்தில் இருந்து வரும் பஸ்கள் நுாறடி சாலை வழியாக பஸ் நிலையத்திற்கு செல்லாமல், முதலியார்பேட்டை வழியாக செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.அண்ணாமலை, முதலியார்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

bala Mani
பிப் 07, 2025 16:44

பாதயாத்திரை சாமிகள் அவதி ஒட்டன்சத்திரம் விருப்பாட்சி தேசிய நெடுஞ்சாலை புதிதாக ரோடு போடப்படுகிறது அதே நேரத்தில் பாதயாத்திரை சாமிகள் செல்லும் பாதையும் சிமெண்ட் தளம் அமைக்கப்படுகிறது ஆதலால் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் தார் சாலையிலும் செல்ல முடியாமல் சிமெண்ட் சாலையிலும் செல்ல முடியாமல் அவர் பெரும் அவதிக்கு உள்ளார் என்றனர் இரண்டும் ஒரே நேரத்தில் வேலை நடப்பதால் பக்தர்கள் நடப்பதற்கு சிரமப்பட்டு கால்கள் போக்களங்களாக மாறுகின்றன பக்தர்கள் வரும் நேரத்தில் இந்த வேலை நடப்பது மனதிற்கு பெரும் அவதியாக உள்ளது தார் சாலை தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதால் கார்கள் விலகி பாதயாத்திரை சமையலறை கால்களில் ஒட்டி கொப்பளம் பெறும் கொப்புளங்கள் வழிகின்றன சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனே நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம் மனக்குமுறலுடன் சென்று கொண்டிருக்கின்றனர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை