புகார் பெட்டி
நாய்கள் தொல்லை
லாஸ்பேட்டை பாரதி நகர், 6, 8வதுகுறுக்கு தெருவில், நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.ராஜன், லாஸ்பேட்டை. கொசு தொல்லை அதிகரிப்பு
வில்லினுார் பத்மினி நகரில், கொசுத் தொல்லை அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.ராமச்சந்திரன், வில்லியனுார். சாலையில் சுகாதார சீர்கேடு
தவளக்குப்பம், ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே குப்பைகள் சாலையில் சிதறி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.ரவிச்சந்திரன், தவளக்குப்பம். பயணிகள் நிழற்குடை தேவை
மரப்பாலத்தில், பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மீனாட்சி, மரப்பாலம்.