வாய்க்காலில் கட்டுமான பொருட்கள்
வாய்க்காலில் கட்டுமான பொருட்கள்: வெங்கடேஸ்வரா நகர் வாய்க்காலில், வீடு கட்டும் கட்டுமான பொருட்களை போடுவதால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கியுள்ளது. சேகர், வெங்கடேஸ்வரா நகர். தெரு விளக்கு எரியவில்லை: மூலக்குளம் சிக்னல் அருகில் தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது. செல்வன், புதுச்சேரி. சிக்னல் பயன்பாட்டிற்கு வருமா? நெல்லித்தோப்பு – காரமணிக்குப்பம் சாலை நெரிசலை தவிர்க்க சிக்னலை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். சுகுமார், புதுச்சேரி. பஸ் டைம் போர்டு வைக்க வேண்டும்: புதுச்சேரியில் பயணிகள் நிழற்குடை பகுதியில் பஸ் டைம் போர்டு அமைக்க வேண்டும். ரவி, புதுச்சேரி.