மேலும் செய்திகள்
புகார் பெட்டி:போதை ஆசாமிகளால் மக்கள் அச்சம்
29-Sep-2026
குப்பை தொட்டி சேதம்: வில்லியனுார் பகுதியில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகள் சேதமடைந்து குப்பை சிதறி கிடக்கிறது. ரஜினி முருகன், வில்லியனுார். தெரு நாய்கள் தொல்லை: லாஸ்பேட்டை அசோக் நகர் ஜீவானந்தம் தெருவில் நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து சென்று வருகின்றனர். அசோக், லாஸ்பேட்டை. மழைநீர் தேங்கியுள்ளது: நைனார் மண்டபம் மூகாம்பிகை நகர், 3வது குறுக்கு தெருவில் மழைநீர் தேங்கி நிற்கிறது. செல்வம், நைனார்மண்டபம். டவுன் பஸ் தேவை: தேங்காய்த்திட்டு பகுதிக்கு மினி பஸ் இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். சேகர், தேங்காய்த்திட்டு.
29-Sep-2026