உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி..

ஆக்கிரமிப்பால் அவதி

வில்லியனுார், மார்க்கெட் சாலையில், ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.கண்ணன், வில்லியனுார்.

தெரு விளக்கு எரியவில்லை

காலாப்பட்டு அம்மன் நகரில், பல நாட்களாக தெரு விளக்கு எரியாமல் அப்பகுதி இருண்டு கிடக்கிறது. குமரன், காலாப்பட்டு.

குப்பையால் சுகாதார சீர்கேடு

தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலை வீதியில், குப்பை குவிந்து கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. ரகு, தவளக்குப்பம்.

சாலை சீரமைக்க வேண்டும்

தவளக்குப்பம் - நாணமேடு சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மதி, தவளக்குப்பம்.

குடிநீர் வசதி தேவை

புதுச்சேரி தற்காலிக பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்.தீனதயாளன், வில்லியனுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ