சாலைகள் படுமோசம்
நைனார்மண்டபம் பகுதியில் உள்ள நகர சாலைகள் மிகவும் குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.லட்சுமணன், நைனார்மண்டபம். நடைபாதை ஆக்கிரமிப்பு
அஜந்தா சிக்னல் அருகில் நடைபாதையில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.கல்யாணம், புதுச்சேரி. பாம்புகள் நடமாட்டம்
நெல்லித்தோப்பு அண்ணா நகர், 6வது குறுக்கு தெருவில் காலிமனையில், செடி, கொடிகள் முளைத்து, புதர்கள் மண்டி கிடப்பதால், பாம்புகள் நடமாட்டம் உள்ளது.மீனா, நெல்லித்தோப்பு. மின் கம்பம் சாய்ந்துள்ளது
காமராஜர் நகர் தொகுதி ரெயின்போ நகர் 7வது குறுக்கு தெருவில், மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது.கஸ்துாரி, ரெயின்போ நகர். ஹைமாஸ் விளக்கு எரியுமா?
கடலுார் சாலை மரப்பாலத்தில் இருந்து சுதானா நகர் வரை, ஹைமாஸ் விளக்கு எரியாமல் உள்ளது.செல்வன், நைனார்மண்டபம்.விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச்சாலையில் பல இடங்களில் மின் விளக்குகள் எரியாமல் இருண்டு கிடப்பதால் விபத்து அபாயம் உள்ளது.காளமேகம், சேலியமேடு. ஊர் பெயர் எழுதப்படுமா?
அரியாங்குப்பம் அடுத்த காக்காயன்தோப்பு சந்திப்பில் வைக்கப்பட்டுள்ள ஊர் பெயர் பலகையில் எழுத்துக்கள் அழிந்துள்ளதால், அதனை புதுப்பித்திட வேண்டும்.வாழுமுனி, காக்காயன்தோப்பு.