மேலும் செய்திகள்
வெள்ளை பூச்சிகளால் மக்கள் அவதி
07-Aug-2025
மேம்பாலத்தில் தேங்கிய நீரால் அவதி வில்லியனுார், ஆரியப்பாளையம், புதிய மேம்பாலத்தில் மழை தண்ணீர் குட்டையாக தேங்குவதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். ரஜினி முருகன், வில்லியனுார். போலீசார் இல்லாததால் விபத்து புதுச்சேரி - கடலுார் நைனார்மண்டபம் பிரதான சாலையில் போக்குவரத்தை சரிசெய்ய டிராபிக் போலீசார் பணியில் இல்லாததால் விபத்து ஏற்படுகிறது. செல்வம், நைனார்மண்டபம். நாய் தொல்லையால் அச்சம் தேங்காய்த்திட்டு, நேருநகர், 2 மற்றும் 3வது குறுக்கு தெருக்களில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளதால் மக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். சந்துரு, தேங்காய்த்திட்டு சிமெண்ட் கட்டைகள் சேதம் புதுச்சேரி நுாறடி சாலை ராஜிவ் சிக்னலில், அக்கார்டு ஓட்டல் ப்ரி லெப்ட் பாதையில் வாய்க்கால் மீது மூடிய சிமெண்ட் கட்டைகள் உடைந்துள்ளது. பாலமுருகன், கோரிமேடு குண்டும், குழியுமான சாலை தட்டாஞ்சாவடி, தொழிற்பேட்டை மாவட்ட தொழில்மையம் எதிரே செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சரவணன், புதுச்சேரி.
07-Aug-2025