உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

விஷ பூச்சிகள் நடமாட்டம் நெல்லித்தோப்பு அண்ணா நகர், 6வது குறுக்கு தெருவில் உள்ள காலி மனையில், புதர்கள் மண்டி கிடப்பதால், விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. சாந்தி, நெல்லித்தோப்பு. மரக்கிளைகளை அகற்ற வேண்டும் கடற்கரை சாலையில் காய்ந்துள்ள மரக் கிளைகளை அகற்ற வேண்டும். சுரேஷ், புதுச்சேரி. காலாவதியான உணவு பொருட்கள் வில்லியனுாரில் ஒரு சில சிறிய பெட்டிக்கடைகளில், காலாவதியான, சாக்லெட் மற்றும் உணவு பொருட்களை விற்பனை செய்வதால், ஆய்வு செய்ய வேண்டும். ரஜினிமுருகன், வில்லியனுார். கடலுார் சாலையில் பள்ளங்கள் அரியாங்குப்பம் முதல் தவளக்குப்பம் வரை சாலையில், மெகா பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மதிவாணன், அரியாங்குப்பம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை