புகார் பெட்டி
விபத்து அபாயம் மரப்பாலம் சந்திப்பு, நுாறடி சாலை வளைவு பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மகாராஜன், மரப்பாலம். சாலையில் ஆக்கிரமிப்பு ராஜ்பவன் பாரதி வீதி சாலையில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. செல்வன், புதுச்சேரி. போக்குவரத்து நெரிசல் வில்லியனுார் - அரும்பார்த்தபுரம் சாலையில் வாகனங்கள் மூலம் காய்கறி, பழம் வியாபாரம் செய்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ரஜினிமுருகன், வில்லியனுார். சாலையில் கழிவு நீர் தட்டாஞ்சாவடி ஐயப்பன் நகர், 2வது குறுக்கு தெருவில் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் ஓடுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மலர்வண்ணன், தட்டாஞ்சாவடி. கொசு தொல்லை உழவர்கரை நகராட்சி ஜவகர் நகர் 2வது தெருவில், கொசு தொல்லையால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். காமராஜ், ரெட்டியார்பாளையம். 'குடிமகன்'களால் மக்கள் அச்சம் கோரிமேடு சாலையில் மது குடிப்பதால், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். வீரா, கோரிமேடு.