உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / புதுச்சேரி /  புகார் பெட்டி:புதுச்சேரி

 புகார் பெட்டி:புதுச்சேரி

சாலை படுமோசம் தவளக்குப்பம் - நல்லவாடு சாலை, மிகவும் குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எத்திராஜ், நல்லவாடு. கழிவுநீர் தேக்கம் சாரம் ஞானபிரகாசம் நகரில், வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கி நிற்கிறது. பாபு, சாரம். வாய்க்காலில் குப்பை நெல்லித்தோப்பு, திருவள்ளுவர் சாலை வாய்க்காலில் குப்பைகள் கொட்டி வருகின்றனர். மோகன், நெல்லித்தோப்பு. சாலையில் திரியும் மாடுகள் குருமாம்பேட் 9வது குறுக்கு தெருவில், மாடுகள் நிற்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. பிரியா, குருமாம்பேட். தெரு விளக்கு எரியுமா? தவளக்குப்பம் வி.ஐ.பி., நகரில் தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது. பன்னீர்செல்வம், தவளக்குப்பம். சாலையில் கழிவுநீர் ரெயின்போ நகர், 7வது குறுக்கு தெரு விரிவில், கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது. உமா, ரெயின்போ நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை