மேலும் செய்திகள்
புகார் பெட்டி: போக்குவரத்து இடையூறு
17-Apr-2026
தெரு நாய்கள் தொல்லை மேட்டுப்பாளையம், சண்முகாபுரம் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். நீலகண்டன், மேட்டுப்பாளையம். கழிவுநீரால் கொசு தொல்லை ராஜ்பவன் காமாட்சியம்மன் கோவில் தெரு பாரதி வீதி சந்திப்பில் கழிவுநீர் தேங்கி நிற்பதால், கொசு தொல்லை அதிகரித்துள்ளது. கார்த்தி, புதுச்சேரி. ஏரியில் ஆகாயத்தாமரை அபிேஷகப்பாக்கம் ஏரியில் ஆகாயத்தாமரை அதிக அளவில் படர்ந்திருப்பதால், அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கருணாநிதி, அபிேஷகப்பாக்கம். போக்குவரத்து இடையூறு மரப்பாலம் சந்திப்பில், வாகனங்கள் நிறுத்துவதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. கணேசன், மரப்பாலம். சாலை படுமோசம் மேட்டுப்பாளையம் - மூலக்குளம் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பாரதி, மேட்டுப்பாளையம். மது குடிப்பதால் மக்கள் அச்சம் தட்டாஞ்சாவடி - கோரிமேடு சாலையில் மது குடிப்பதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். பிரபாகரன், தட்டாஞ்சாவடி. சாலையில் பூ மாலைகள் மரப்பாலம் சந்திப்பு முதல் தேங்காய்த்திட்டு சுடுகாடு சாலையில் இறுதி சடங்கு செல்லும் போது பூ மாலைகளை வீசி செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. பாண்டியன், மரப்பாலம்.
17-Apr-2026