புகார்: புதுச்சேரி
அடிக்கடி மின்தடை நைனார்மண்டபம் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். செல்வன், நைனார்மண்டபம். பேனர்களால் விபத்து லாஸ்பேட்டை, ஏர்போர்ட் சாலையில் பேனர்கள் விழுந்து கிடப்பதால் விபத்து ஏற்பட்டு வருகிறது. ஆனந்த், லாஸ்பேட்டை. மரம் விழும் அபாயம் மடுகரை மந்தைவெளி நடுத்தெரு அரசு பள்ளி அருகே மரம் கீழே விழும் நிலையில் உள்ளதால் அகற்ற வேண்டும். செல்வம், மடுகரை. தெரு நாய்கள் தொல்லை தட்டாஞ்சாவடி தொழில்பேட்டையில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. கணேஷ், தட்டாஞ்சாவடி. போக்குவரத்து நெரிசல் வழுதாவூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், முக்கிய இடங்களில் டிராபிக் போலீசாரை நியமிக்க வேண்டும். மகாலிங்கம், கதிர்காமம்.