மேலும் செய்திகள்
புகார் பெட்டி புதுச்சேரி
26-Aug-2025
மாடுகளால் இடையூறுவேல்ராம்பட்டு, திருப்பூர் குமரன் வீதி, 3வது குறுக்கு தெருவில் மாடுகள் படுத்திருப்பதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. -காந்தி, வேல்ராம்பட்டு. வாய்க்கால் சிலாப் சேதம் தட்டாஞ்சாவடி, சுப்பையா நகர் 6வது குறுக்கு தெரு, மறைமலை அடிகள் சாலை சந்திப்பில், கழிவுநீர் வாய்க்கால் சிலாப் சேதமடைந்து உள்ளது. -ராமகிருஷ்ணன், சுப்பையா நகர். தெரு நாய்களால் அச்சம் உழவர்கரை, டைமன் நகர், 3வது குறுக்கு தெருவில், நாய்கள் அதிகமாக சுற்றித் திரிவதால், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். -அமுதா, உழவர்கரை. கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தி வில்லியனுார், மணவெளி, தண்டு கரை வீதியில் ஏரி வாய்க்கால் கழிவுநீர் தேங்கி நிற்பதால், கொசுக்கள் உற்பத்தி அதிமாக பெருகி வருகிறது. -குமார், வில்லியனுார்.
26-Aug-2025