உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / புதுச்சேரி / புதுச்சேரி: புகார் பெட்டி

புதுச்சேரி: புகார் பெட்டி

சாலையில் பள்ளம் கொக்கு பார்க்கில் இருந்து ராஜிவ் சதுக்கம் செல்லும் வழியில் உள்ள பள்ளத்தை விபத்து ஏற்படுவதற்குள் சரி செய்ய வேண்டும். ரவி, சண்முகாபுரம். நாய்கள் தொல்லை குருமாம்பேட், 4வது குறுக்கு தெருவில், நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்துவருகினறனர். பாஸ்கரன், புதுச்சேரி. குப்பை வண்டி வருமா? தட்டாஞ்சாவடி தாகூர் நகரில் குப்பை வண்டி சரியாக வரததால், குப்பைகள் தேங்கி கிடக்கிறது. சாய்ராம், தாகூர் நகர். தெரு விளக்கு எரியுமா? பாக்கமுடையான்பட்டு உடையார் தெருவில் தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது. ஆசியகுமார், பாக்கமுடையான்பட்டு. குண்டும் குழியுமான மேம்பாலம் நுாறடி சாலை ரயில்வே மேம்பாலம் குண்டும், குழிமாக உள்ளது. சக்தி, புதுச்சேரி. சாலையில் மெகா பள்ளம் கடலுார் சாலை, இடையார்பாளையம் ஆற்றுப்பாலம் அருகே சாலையில், மெகா சைஸ் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். ராகவன், புதுச்சேரி. போக்குவரத்து இடையூறு உப்பளம் சாலையில் வாகனங்களை நிறுத்தி செல்வதால், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. கதிரவன், உப்பளம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி