உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / ஆண்டுக்கு ரூ.180 கோடி டர்ன் ஓவர்!

ஆண்டுக்கு ரூ.180 கோடி டர்ன் ஓவர்!

ஸ்ரீ விசாலம் சிட்பண்டின் இயக்குனர் ஏ.ஆர்.மீனாட்சி: காரைக்குடி அருகிலுள்ள பள்ளத்துாரைச் சேர்ந்த என் மாமனார் ஏ.ஆர்.ராமசாமியின் கடின உழைப்பால் துவங்கப்பட்டது தான், விசாலம் சிட்பண்ட். கடந்த, 78 ஆண்டுகளாக, லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்ற சீட்டு நிறுவனம். ஆண்டுக்கு, 180 கோடி ரூபாய் அளவுக்கு, 'டர்ன் ஓவர்' செய்து வருகிறோம். முதலில் உறவினர்கள், நண்பர்களை மட்டும் சேர்த்து சீட்டு நடத்தினார் மாமனார். அதன்பின் சட்டப்பூர்வமாக பதிவு செய்து, தமிழகத்தில் பல கிளைகளை துவங்கினார். மக்கள் செலுத்திய பணத்துக்கு, நாங்கள் தான் பொறுப்பு என்பதால், அந்த பணத்தை எடுத்து தொழிலில் முதலீடு செய்யக்கூடாது என்பது எங்கள் கொள்கை; இதனால், வேறு எந்த தொழிலையும் நாங்கள் செய்யவில்லை.பள்ளிப்படிப்பை முடித்த எனக்கு, 15 வயதிலேயே திருமணமாகி விட்டது. கணவர் வாயிலாக தான் சிட்பண்ட் நிர்வாகம் குறித்து அறிந்து கொண்டேன். அனுபவ அறிவு தான் என்றாலும், நிர்வாகத்திறனும், கணக்குகளும் எனக்கு சிறப்பாக கைவந்தன. 1996ல் இயக்குனர் ஆனேன்.வாடிக்கையாளர்களுக்கு பணத்தை ஒப்படைப்பதும் சரி, அரசுக்கு கணக்கை ஒப்படைப்பதும் சரி, நுால் பிடித்தாற்போல் இருக்கும். அலுவலகத்தில் மட்டுமல்ல... வீட்டிலும் கம்பெனி வளர்ச்சி குறித்து தான் பேசிக் கொண்டிருப்போம்.வார, மாத இதழ்கள் படிப்பது, கோவிலுக்கு செல்வது, வீட்டு வேலைகள், பேரக்குழந்தைகள் இவையெல்லாம் எனக்கு ரிலாக்சான பொழுதுபோக்குகள்.மேலும் நெல்லை, மயிலாடுதுறையில் உள்ள நிலங்களில் விவசாயம் நடக்கிறது; எஸ்டேட்டும் உள்ளது. அவ்வப்போது அவற்றை போய் பார்த்து வருவேன்.கூடவே, வேத பாடசாலை நடத்துகிறோம். அறக்கட்டளை வாயிலாக எளிய மக்களுக்கு மிக குறைந்த கட்டணத்தில், மருத்துவ பரிசோதனைகள் செய்கிறோம். இவற்றை கவனித்துக் கொள்வதும் எனக்கு ஒரு வகையில் புத்துணர்வு தான்.கடந்த, 60 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்த தமிழக சிட்பண்ட் அசோசியேஷனில் நாங்கள் தான் முதல் உறுப்பினர். ஒரு லட்சம் முதல் ௧ கோடி ரூபாய் வரை சீட்டு நடத்தும் நாங்கள், முறையாக பதிவு பெற்று, அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடத்தி வருகிறோம்.பொய்யான விளம்பரங்கள் செய்வதில்லை; பரிசுகள் கொடுப்பதில்லை. சொன்ன தேதியில் சீட்டு பணத்தை வழங்கி விடுவோம். சீட்டு தொழிலுக்கு, 18 சதவீதம் ஜி.எஸ்.டி.,யால் இப்போது பாதிப்பு தான் என்றாலும், எங்களது துாண்களான மூன்று தலைமுறை வாடிக்கையாளர்களால் பிரச்னை இல்லை.நான்காம் தலைமுறை வாடிக்கையாளர்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

N Annamalai
செப் 01, 2024 10:12

வாழ்த்துக்கள்


கத்தரிக்காய் வியாபாரி
ஆக 31, 2024 17:10

இவ்வளவு காசு வந்தும் நாட்டுக்காக வரி செலுத்த தயக்கம் ஏன்?. ஒரு மூலையில் பொட்டி கடை நடத்துகிறவர் கூட வரி செலுத்துகிறார்.


KRISHNAN R
ஆக 31, 2024 07:12

எல்லாமே 18 சதம் வரி போட்டது கொடுமை. மக்கள் மற்றும் , இது போன்ற நல்ல நிறுவனங்கள்..பாதிக்கும்


sri
ஆக 30, 2024 06:18

கிஸ்தி யால் பல சிறுதொழில்கள் பாழாகிவிட்டது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை