உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / இயந்திர மயமாக்கிய பால் பண்ணையை உருவாக்க வேண்டும்!

இயந்திர மயமாக்கிய பால் பண்ணையை உருவாக்க வேண்டும்!

பால் ஏ.டி.எம்., மிஷினை உருவாக்கி, விற்பனை செய்து வரும், நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகேயுள்ள காளப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞரான பாலமுருகன்: இது தான் எங்களோட பூர்வீக கிராமம். விவசாயம் தான் வாழ்வாதாரம். சென்னையில் பி.இ., மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தேன். ஆனால், எந்த ஒரு கம்பெனிக்கும் வேலைக்கு போகக் கூடாதுங்கிறதுல உறுதியாக இருந்தேன்.நவீன முறையில் பால் விற்பனைக்கான ஏ.டி.எம்., மிஷின் தயார் செய்து, வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்தால், கூடுதல் லாபம் கிடைக்கும் என்று தோன்றியது. அப்பாவிடம் கேட்டதற்கு, 'உன் விருப்பம் போல் செய்' என்றார். பால் ஏ.டி.எம்., மிஷினுக்கு தேவையான மென்பொருளை நானே உருவாக்கினேன். 95,000 ரூபாய் முதலீட்டில் இந்த மிஷினை உருவாக்கினேன்.இது பேட்டரியில் இயங்கக்கூடியது. 4.5 அடி உயரம், 2 அடி நீளம், 2 அடி அகலம் கொண்ட இந்த மிஷினில், 40 லிட்டர் பால் கேனை வைக்கலாம்.மென்பொருள் மற்றும் மின்னணு தொழில்நுட்பம் வாயிலாக இந்த மிஷின் இயங்குகிறது. பணம் செலுத்துறதுக்காக அமைக்கப்பட்டுள்ள பகுதியில் பணத்தை செலுத்திட்டு, பட்டனை அழுத்தினால், அந்த தொகைக்கு உரிய பால் வரும்.இந்த மிஷினில் அமைக்கப்பட்டிருக்குற, 'கியூ.ஆர்., குறியீடை' ஸ்கேன் செய்து, 'கூகுள் பே, போன் பே' வாயிலாக பணம் செலுத்தியும் பாலை பெறலாம். இந்த மிஷினில் மட்டும் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பால் வாங்குறதுக்கான பிரத்யேக ஏ.டி.எம்., கார்டுகளையும் உருவாக்கி இருக்கேன். அதை பலர் பயன்படுத்தி வருகின்றனர். பாலை எதில் வேண்டுமானாலும் பிடித்துக் கொள்ளலாம். துல்லியமான அளவில் கிடைப்பதை, டிஜிட்டல் திரை வாயிலாக உறுதி செய்து கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு தொகை செலுத்துகின்றனர் என்ற விபரம், உடனுக்குடன் மொபைல் போனில் உள்ள, 'ஆப்' வாயிலாக இயங்கக்கூடிய கூகுள் ஷீட்டுக்கு வந்துடும்.இதுவரை, 14 மிஷின்கள் விற்பனை செய்துள்ளேன். தற்போது, குளிர்சாதன வசதியுடன் கூடிய பாலை நாள் முழுதும் வைத்துக் கொள்வது போன்ற மிஷினை தயார் செய்து விற்பனை செய்கிறேன். அதில், ஒரே நேரத்தில், 100 லிட்டர் பால் வைக்க முடியும்; அதன் விலை, 2.50 லட்சம்.இன்னும், 100 மாடுகளுக்கு மேல் வளர்க்கணும்... முற்றிலும் இயந்திர மயமாக்கப்பட்ட பால் பண்ணையையும், பால் விற்பனை நிலையங்களையும் உருவாக்க வேண்டும் என்பது தான் என் லட்சியம்.தொடர்புக்கு:63828 02493


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

g.s,rajan
ஜன 11, 2024 21:46

தமிழ்நாட்டில் அடுத்த ஆவினை உருவாக்குங்க,வாழ்த்துக்கள் ....


Ramesh Sargam
ஜன 11, 2024 00:15

ஆஹா, அருமை. சிறப்பு. இதுபோன்ற உள்நாட்டு விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புக்களை அரசு மற்றும் தனியார் ஆதரித்து உதவவேண்டும்.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை