உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / செல்ப் லவ் தான் ஆயுள் முழுதும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்!

செல்ப் லவ் தான் ஆயுள் முழுதும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்!

தன் 50 வயதிலும், ஓட்டப்பந்தயத்தில் பதக்கங்கள் குவிக்கும் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் விஜயா சுரேஷ்: என் பூர்வீகம், சேலத்தில் உள்ள கருப்பூர் கிராமம். 13 வயது வரை ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் டீமில் இருந்தேன்.அந்த காலத்தில் பெண் குழந்தைகளை குறிப்பிட்ட வயதிற்கு மேல் விளையாட அனுமதிக்க மாட்டார்கள்.அப்படித்தான் எனக்கும், 13 வயதுடன் ஸ்போர்ட்ஸ் ஆர்வம் தடைபட்டது. 35 ஆண்டுகள் கழித்து, என் 48 வயதில் மறுபடியும் நான் ஸ்போர்ட்சுக்கு வருவேன், சாதிப்பேன்னு கனவில் கூட நினைத்ததில்லை.நான் உண்டு, என் வேலை உண்டு என்று தான் இருந்தேன். ஆனால், மறுபடியும், 'ஸ்பிரின்ட்டிங்' செய்ய ஆரம்பித்தேன். 100, 200 மீட்டர் என்று வேகமாக ஓடுவதை தான் ஸ்பிரின்ட்டிங் என்று சொல்வர்.பெரிய இடைவெளிக்கு பின் ஓடினாலும், 400 மீட்டர் டிஸ்ட்ரிக்ட் மீட் ஸ்பிரின்ட்டிங்கில் முதலிடத்துக்கு வந்தேன்.அந்த நம்பிக்கையில், அடுத்து ஸ்டேட் மீட்டுக்கு தயாரானேன். ஒரு கோச்சிடம் முறைப்படி பயிற்சி எடுத்துக் கொண்டேன்.மதுரை ஸ்டேட் மீட்டில் 100, 200 மற்றும் 400 மீட்டரில் ஓடி, மூன்றிலும் கோல்டு மெடல் வாங்கினேன். அடுத்து நேஷனலில் ஒரு சில்வர், இரண்டு கோல்டு மெடல் வாங்கினேன்.தென் கொரியாவில் நடந்த ஏஷியா - பசிபிக் மீட்டில் மூன்று மெடல் வாங்கினேன். அது, 50 - 55 வயதினருக்கான பிரிவு.அந்த நிகழ்ச்சியில் மெடல் ஜெயித்து தேசியக் கொடியை பிடித்து நின்ற தருணத்தை, வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இதுவரை, 47 பதக்கங்கள் வாங்கியுள்ளேன்.எனக்கு, என் டாக்டர் கேரியரும் முக்கியம்; ஸ்போர்ட்சும் முக்கியம். அதனால், 'ஒர்க் லைப் பேலன்ஸ்' கற்றுக் கொணடேன். பணி நேரத்தை ஒரு மணி நேரம் குறைத்துக் கொண்டேன்.என்னுடன் ஓடும் ஆண்களை விட நான் வேகமாக ஓடுவதை, அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. இதனால், 'இந்த வயதில் இது தேவையா, சீன் போடுறாங்க' என்று கூறுவர்.ஆனால், அவற்றையெல்லாம் கண்டுகொள்ள மாட்டேன். உங்களை நேசிக்க கற்றுக் கொண்டீர்கள் எனில், சாப்பிடுவது முதல், 'ஒர்க் அவுட்' வரை உங்களை நல்லா வைத்துக் கொள்ளும் பல விஷயங்களை பார்த்து பார்த்து செய்வீர்கள். அந்த, 'செல்ப் லவ்' தான், உங்களை ஆயுள் முழுதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.வரும் மே மாதம், அல்பேனியா நாட்டில் நடக்க உள்ள, 'ஸ்பீடு ரன்னிங்'கில் பங்கேற்க இருக்கிறேன். அதில், இந்தியாவில் இருந்து எந்த பெண்ணும் மெடல் வாங்கியதில்லை என்ற குறையை தீர்ப்பது தான், என் அடுத்த லட்சியம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை