மேலும் செய்திகள்
வந்தே பாரத் ரயில் பொம்மை!
26-Apr-2026
'என்.எல்.ஹோம் புட்ஸ்' என்ற பெயரில், வீட்டிலேயே உணவு தயாரித்து விற்பனை செய்யும், சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த, 45 வயதான சசி ரேகா மற்றும், 42 வயதான லாவண்யா சகோதரியர்: சசிரேகா-: நான் தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை பார்த்த சமயத்தில், சொந்தமாக தொழில் துவங்கும் எண்ணம் இருந்தது. அந்த நேரத்தில், எங்கள் வீட்டிற்கு அருகில் ஆதரவற்ற நிலையில் இருந்த ஒருவர், சாப்பாடு கிடைக்காமல் கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்தார். அவரை பார்த்ததும், இதுபோன்று பலரும் இருப்பர் என்பதால், நம்மால் முடிந்த வரை, 20 பேருக்கு சமைத்துக் கொடுக்கலாம் என்று முடிவு செய்து, தினமும் ஒரு கலவை சாதம் செய்து, அவர்கள் இருக்கும் இடத்திற்கு கொண்டு சென்று கொடுத்து வந்தோம்.
அதேபோல், கொரோனா காலத்திலும் உணவின்றி வாடியவர்களுக்கு உணவளித்தோம். அந்த அனுபவத்தையே தொழிலாக மாற்ற முடிவு செய்து, 15 ஆண்டுகளாக பார்த்து வந்த வேலையை விட்டு விட்டு, வீட்டிலேயே சமையல் செய்து கொடுக்கும் தொழிலை நானும், என் தங்கையும் ஆரம்பித்தோம். தொழில் துவங்குவதற்கு தேவையான முதலீட்டை என் சேமிப்பில் இருந்து பயன்படுத்தினேன். தற்போது வீட்டிலேயே காலை, மதியத்துக்கான சைவ, அசைவ உணவுகளை தயாரித்து, வாடிக்கையாளர்களின் இடத்திற்கே சென்று கொடுக்கிறோம். உணவின் தரத்தில் எந்த சமரசமும் செய்து கொள்வது இல்லை. காய்கறிகள், இறைச்சியை தினமும் புதிதாக, தரமாக வாங்கி பயன்படுத்துகிறோம். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மறுமுறை பயன்படுத்துவது இல்லை. Gallery லாவண்யா: இப்போது சமையலுக்கு மூன்று பெண்களையும், வினியோகம் செய்ய இரண்டு ஆண்களையும் பணியில் அமர்த்தி உள்ளோம். சமூக வலைதளம் வாயிலாக ஆர்டர் எடுக்கிறோம். தினமும், 200 ஆர்டர்கள் வரை வருகின்றன. நோயாளிகளுக்கு ஏற்ற மாதிரி தனிப்பட்ட உணவையும் செய்து கொடுக்கிறோம். ஒருமுறை சாப்பிட்டவர்கள், அடுத்தவர்களுக்கு பரிந்துரைக்க ஆரம்பித்த பின், எங்களுக்கு நம்பிக்கை அதிகரித்தது. தொழிலில் லாபம் பார்க்க ஓராண்டு ஆனது. இது தவிர, வீட்டுக்கு தேவையான 30 வகை மசாலா பொருட்கள், பாசிப்பயறு லட்டு, கறிவேப்பிலை மிட்டாய், முருங்கைக்கீரை பொடி ஆகியவற்றையும் தயாரித்து, விற்பனை செய்ய துவங்கி இருக்கிறோம். தற்போது மாதம், 2 லட்சம் ரூபாய் வரை வருமானமும், 1.30 லட்சம் ரூபாய் லாபமும் கிடைத்து வருகிறது. எந்த தொழிலாக இருந்தாலும், ஆரம்பத்தில் சில தவறுகள் நடக்கும். அவற்றை சரிசெய்து, தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம். தொடர்புக்கு 88255 22647
26-Apr-2026