மேலும் செய்திகள்
அரிய வகை பழ மரங்களை வளர்க்கிறேன்!
25-Sep-2025
அரிய வகை பழ மரங்களை வளர்க்கிறேன்!
25-Sep-2025
மரப்பயிர் சாகுபடி செய்து லாபம் சம்பாதித்து வருவது பற்றி கூறும், அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் வசிக்கும் ராஜகோபால்: மாவட்ட நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்ற நான், 21 ஏக்கரில் சவுக்கு மற்றும் தைல மரங்கள் சாகுபடி செய்து, கணிசமான வருமானம் பார்த்து வருகிறேன். நாங்க விவசாய குடும்பம். அப்பா, கிராம நிர்வாக அதிகாரி பணியையும் பார்த்துகிட்டு, விவசாயத்தையும் கவனித்தார். நான், சட்டப் படிப்பு முடித்து விட்டு, 27 ஆண்டுகள் வழக்கறிஞராகவும், 14 ஆண்டுகள் தேனி, திண் டுக்கல், தஞ்சாவூர் ஆகிய ஊர்களில் மா வட்ட நீதிபதியாகவும் இருந்தேன். அப்பாவோட மறைவுக்குப் பின் விவசாயத்தை கவனிக்க ஆள் இல்லை. எனக்கு சிறு வயதிலிருந்தே விவசாயம் மேல் நேசமும், மிகுந்த மரியாதையும் உண்டு. நம்மால் முடிந்த அளவுக்கு, குறைந்த பரப்பில் விவசாயம் செய்ய ஆசைப்பட்டேன். எங்க குடும்பத்திற்கு சொந்தமான, 100 ஏக்கரில், 79 ஏக்கரை விற்பனை செய்து மீதி, 21 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்தேன். 'போர்வெல்' வசதியுள்ள, 8 ஏக்கர் நிலத்தில் நிலக்கடலை, கம்பு, சோளம் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்தேன். மீதி, 13 ஏக்கர் மானாவாரி நிலத்தை பல ஆண்டுகள் தரிசாகவே போட்டு இருந்தேன். நன்றாக உழவு ஓட்டி, பசுந்தாள் விதைப்பு செய்தேன். தமிழ்நாடு காகித ஆலை அலுவலர்களின் முறையான வழிகாட்டுதலுடன், தைல மரங்களை, 2023 ஜனவரி மாதம் நட்டேன். வரிசைக்கு, 10 அடி, மரத்துக்கு மரம், 5 அடி வீதம் இடைவெளி விட்டு நாற்றுகள் நட்டேன். ஒரு மாதம் வரைக்கும், 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் ஊற்றினேன். அதற்கு பின் தண்ணீர் ஊற்றவே இல்லை; எந்த இடுப்பொருளும் கொடுக்கவில்லை. மழை நீரிலேயே செழிப்பாக பயிர்கள் வளர்ந்தன. நான் வெளியூரில் வசித்தாலும் விவசாய பணியாளர்கள் பற்றாக்குறை, விவசாய பொருளுக்கு சரியான விலை கிடைக்காத நிலை உள்ளிட்ட காரணங்களால், உணவு பயிர்களை கைவிட்டேன். கடந்த 2010ம் ஆண்டு, 8 ஏக்கரில் சவுக்கு சாகுபடி செய்ய துவங்கினேன். 15 ஆண்டுகளில், நான்கு முறை சவுக்கு பயிரை அறுவடை பண்ணி வருமானம் பார்த்திருக்கிறேன். மரங்களுக்கு சீரான முறையில் தண்ணீர் ஊற்றுகிறேன். சவுக்கு மரங்கள் நன்றாக, செழிப்பாக வளர்ந்து, நான்காவது ஆண்டு அறுவடைக்கு வந்து விடும். டி.என்.பி.எல்., நிறுவனத்துக்கு சவுக்கு மரங்களை விற்பனை செய்ததன் வாயிலாக, 41.99 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது. சாகுபடி செலவு, அறுவடை கூலி, போக்குவரத்து உள்ளிட்ட எல்லா செலவுகளும் போக, 33.50 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்தது! தொடர்புக்கு: ராஜகோபால் மொபைல் போன்: 94430 21244
25-Sep-2025
25-Sep-2025