உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / கரு உருவாதலை தெரிந்து கொள்ளுங்கள்!

கரு உருவாதலை தெரிந்து கொள்ளுங்கள்!

மாதவிடாய் சுழற்சி நிலைகள் குறித்து கூறும், மகப்பேறு மருத்துவர் ஆனந்தப்பிரியா: மாதவிடாய் சுழற்சியில், மாதவிடாய் நிலை, இயக்குநீர் நிலை, கருமுட்டை விடுபடும் நிலை, திசுப் படிவு நிலை என, நான்கு நிலைகள் உள்ளன.கருமுட்டை, விந்துவுடன் இணைந்து ஒருவேளை கருவுறுதல் நிகழ்ந்தால், அந்த கருவுக்கு ஊட்டச்சத்து வழங்க, கர்ப்பப்பையின் உட்புற சுவர், மெத்தைபோல திசுக்களால் தடித்துஇருக்கும். கருவுறுதல் நிகழ வில்லை எனில், கர்ப்பப்பையின் உட்புற சுவரான அந்த திசு, உதிரப்போக்காக வெளியேறும். இதுவே மாதவிடாய்.எட்டு, ஒன்பது மணி நேர துாக்கம் அவசியம். நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை, 'நாப்கின்' மாற்றிவிட வேண்டும். பழச்சாறு, இளநீர், பால் என, சத்து நிறைந்த பானங்களை அருந்த வேண்டும்.இயக்குநீர் சுரப்பது, மாதவிடாயின் முதல் நாளில் ஆரம்பித்து, கருமுட்டை விடுபடும் நாளில் முடியும். இதை தான், இயக்குநீர் நிலை என்கிறோம். இது தோராயமாக, 10 நாட்கள் நீடிக்கும். இந்த நிலையில், அடிமூளைச் சுரப்பி எனப்படும், 'பிட்யூட்டரி' வெளியிடும், 'ஹார்மோன்' காரணமாக கருமுட்டை வளர்ச்சியடையும்; கர்ப்பப்பையின் உட்சுவர் தடிமனாகும். இரும்புச்சத்து நிறைந்த உணவுகளான பேரீச்சை, மாதுளை, நெல்லிக்காய் மற்றும் தயிர் அவசியம் உட்கொள்ள வேண்டும்.கருமுட்டை விடுபடும் நிலையில், அதிகம் சுரக்கும் மூன்று ஹார்மோன் காரணமாக, வளர்ச்சியடைந்த கருமுட்டை, சினைப்பையிலிருந்து விடுபட்டு, சினைப்பைக் குழாய் வழியாக கர்ப்பப்பைக்கு செல்லும். இங்கு தங்கும் கருமுட்டையின் ஆயுட்காலம், 24 மணி நேரமே. அதற்குள்ளாக விந்துவுடன் இணைந்தால் மட்டுமே, கருவுறுதல் நடக்கும்.பொதுவாக, மாதவிடாய் சுழற்சியின், 14-வது நாளில் கருமுட்டை விடுபடும். கருவுறுதலுக்கு காத்திருப்போர், இந்நாளில் உறவு கொள்ளலாம். கருமுட்டை விடுபடுதலுக்குத் தேவையான ஹார்மோன் துாண்டுதலை அதிகப்படுத்தும் உலர் திராட்சை, பீன்ஸ், சோயா, தயிர், வால் நட், பூண்டு போன்றவற்றை, உணவில் சேர்த்து கொள்ளலாம்.கருமுட்டை, கர்ப்பப் பையை அடைந்தது முதல், அடுத்த மாதவிடாய் ஆரம்பிக்கும் நாள் வரையிலான காலத்தில், கர்ப்பப் பையின் உட்புறத்தில், திசு உருவாகிப் படியும். இதற்கு, 'லுாட்டியல்' நிலை என்று பெயர்.மாதவிடாயின் அறிகுறிகளான முதுகுவலி, கால்வலி, அடி வயிற்றில் வலி போன்றவை ஏற்பட்டு, துாக்கம் தடைபட்டால், உணவுக்கு பின் பால் அருந்தலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை