மேலும் செய்திகள்
'தொழில் துவங்க பெரிய முதலீடுகள் தேவையில்லை!'
07-Aug-2026
மாதம், 1.50 லட்சம் ரூபாய்க்கு இட்லி பொடிகள் விற்பனை செய்யும், மதுரை மாவட்டம், கோசாகுளத்தைச் சேர்ந்த, 45 வயதாகும் மகேஸ்வரி சுடலைமுத்து:'நமக்கென ஒரு வருமானம் இருந்தால் நன்றாக இருக்கும்' என்று, ஒவ்வொரு பெண்ணுக்கும், ஏதோ ஒரு வயதில் தோன்றும்; எனக்கு, 35 வயதில் தோன்றியது. சொந்தமாக தொழில் துவங்க, வீட்டில் போராடி சம்மதம் வாங்கினேன்; கணவர், 50,000 ரூபாய் கொடுத்தார்.மொத்தமாக புடவைகள் வாங்கி, விற்பனை செய்ய ஆரம்பித்தேன். தொழில் முன்னேற்றம் அடைந்த நேரத்தில், கொரோனா ஊரடங்கு வந்தது. புடவை விற்பனையில் கிடைத்த பணத்தை, ஊரடங்கில் வீட்டு செலவுக்காக பயன்படுத்திக் கொண்டேன்.கொரோனா ஊரடங்கு முடிந்து, இயல்பு நிலை திரும்பியதும், மீண்டும் சம்பாதிக்கும் ஆசை வந்தது. அப்போது என்னிடம் இருந்த, 300 ரூபாயை முதலீடாக்கி, 1 கிலோ இட்லி பொடி தயாரித்து, அக்கம் பக்கத்து வீடுகளில் விற்றேன்; 50 ரூபாய் லாபம் கிடைத்தது. அடுத்த நாள், 350 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கி, இட்லி பொடி தயாரித்து விற்பனை செய்தேன்.வீடுகள் தாண்டி, கடைகளுக்கும் பொடிகள் தயாரித்துக் கொடுத்தேன். விற்பனை அதிகரிக்கவே, 'மதுரை மாடசாமி இட்லி பொடி' என்ற பெயரில் தொழில் துவங்கினேன்.'சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்தால் கூடுதல் வாடிக்கையாளர்கள் கிடைப்பர்' என்று என் மகன் கூறவே, கறிவேப்பிலை, துாதுவளை பொடிகளை தயாரிக்க ஆரம்பித்தேன். செடிகளில் இருந்து இலைகளை பறிப்பது துவங்கி, பொருட்களை வறுப்பது, அரைப்பது என அனைத்தையும் காணொளிகள் எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட ஆரம்பித்தேன்; ஆர்டர்கள் வர ஆரம்பித்தன.அதன்பின் அக்கம் பக்கத்து வீட்டு பெண்களை சேர்த்து, மகளிர் சுய உதவிக்குழு ஆரம்பித்தேன். அரசிடம் இருந்து, 35,000 ரூபாய் கடன் கிடைத்தது. அந்த பணத்தில் தொழில்முறை இயந்திரம் வாங்கி, என் நிறுவனத்தை பதிவு செய்தேன். உணவு தரச்சான்றிதழ், ஜி.எஸ்.டி., எண் வாங்கினேன்.இப்போது, 15 விதமான பொடி வகைகள் தயாரிக்கிறேன்; நிறைய ஹோட்டல்களுக்கும் விற்பனை செய்கிறேன். மாதம், 350 கிலோ வரை இட்லி பொடி வகைகளை தயாரித்து விற்பனை செய்கிறேன்; மாதம் 1.50 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது.பெண்கள் தொழில் ஆரம்பிக்க வேண்டுமெனில், பெரிய முதலீடு தேவை என்று நினைக்க வேண்டாம். கையில் இருக்கும் சிறிய தொகையிலும் பெரிய அளவில் சம்பாதிக்கலாம். தோல்வி ஏற்பட்டால், பயப்படாமல், சரியான முறையில் திட்டமிட்டு அடுத்த முயற்சியை எடுக்க வேண்டும்; அதுதான் வெற்றிக்கான முதல் படி!தொடர்புக்கு: 98434 30304***'என்னால் நான்கு குடும்பங்கள் வாழ வேண்டும்!'
07-Aug-2026