உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / சும்மா இருக்கும் நேரங்களில் மட்டும் ரீல்ஸ் செய்யலாம்!

சும்மா இருக்கும் நேரங்களில் மட்டும் ரீல்ஸ் செய்யலாம்!

'ரீல்ஸ்' வீடியோக்கள் வெளியிட்டு, பல லட்சம் பார்வையாளர்களை வசீகரித்துள்ள, வேலுாரைச் சேர்ந்த இரட்டையர்களான ஜீவா - ஜீவிதா:ஜீவா: அம்மா, அப்பா, இரண்டு அண்ணன்கள், தாத்தா, பாட்டி, என எங்கள் குடும்பத்தில் எங்களையும் சேர்த்து மொத்தம் எட்டு பேர். பள்ளியில் படிக்கும்போது, 'டிக்டாக் வீடியோஸ்' பண்ணுவோம். அப்போதே நல்ல, 'ரீச்' கிடைத்தது. எங்கள் வீட்டில் சின்னப்பிள்ளைங்க ஏதோ செய்றாங்க என்று விட்டு விடுவர்.ஆனால், பக்கத்து ஊரைச் சேர்ந்தோர் எல்லாம், 'நீங்க வீடியோ போடுற டுவின்ஸ் தானே' என்று கேட்ட போது தான், எங்கள் வீட்டுக்கும், எங்களுக்கும் இதன் ரீச் தெரிந்தது. அதன்பின் சும்மா இஷ்டத்துக்கு வீடியோக்கள் போடாமல், 'கன்டென்ட்'களை யோசித்து செய்ய ஆரம்பித்தோம்.டிக்டாக் தடை செய்யப்பட்ட பின், 'இன்ஸ்டாகிராம்' சமூக வலைதளத்தில், எங்கள் வீடியோக்களை பதிவிட ஆரம்பித்தோம். இரண்டே மாதத்தில் ஒரு ரீல், 10.9 லட்சம், 'வியூவ்ஸ்' போக ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவுக்கும் மிகவும் எளிதான ஸ்டெப்ஸ் போட்டு தான் அதில் ஆடியிருந்தோம். அதிகபட்சமாக ஒரு ரீல் 50.9 லட்சம் வியூவ்ஸ் போனது. ஜீவிதா ஒரே டேக்கில் செய்து விடுவாள். நான் தான் சொதப்புவேன்.ஜீவிதா: எங்களுக்கு தோன்றும் ஐடியாக்களை இருவரும் பேசி விட்டு தான் பண்ணுவோம். பின் எடிட் செய்வோம். எங்கள் நண்பர்கள், உறவினர்கள் என, அனைவருக்குமே யார் ஜீவா, ஜீவிதா என்று கண்டுபிடிப்பதில் குழம்பி தான் போவர்.அந்தளவுக்கு இருவரும் டிரஸ், ஹேர் ஸ்டைல் என, அனைத்தையும் ஒரே மாதிரி தான் செய்வோம். வலது புருவத்தில் தழும்பு இருந்தால் ஜீவிதா, இல்லை எனில் ஜீவா.சமூக பொறுப்புகளுடன் தான் வீடியோக்களை பதிவிடுவோம். எங்களுடைய இன்னொரு கொள்கை, இருவரும் சேர்ந்து தான் வீடியோ போடுவோம். ஒரு முறை ஒரு குறும்படத்திற்கு இருவரில் ஒருவர் மட்டுமே நடிக்க முடியுமா என்று கேட்டனர். நாங்கள் மறுத்து விட்டோம். எங்களுக்கு வரும் கமென்ட்களில், 'இருவரும் இப்படியே ஒற்றுமையாக இருக்க வேண்டும்' என, வாழ்த்து வரும்.இன்னும் சிலர், 'இப்படியே ஒற்றுமையாக இருக்க முடியாது' என, எதிர்மறை கமென்ட்டும் போடுவர். அதை நாங்கள் கண்டுகொள்ளவே மாட்டோம். படிப்பை முடித்து, வேலைக்கு போய் பெற்றோரை நன்கு பார்த்துக்கொள்ள வேண்டும். சும்மா இருக்கும் நேரங்களில் மட்டுமே ரீல்ஸ் செய்யலாம். இப்போதைக்கு இதுதான் எங்கள் திட்டம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ