/ புகார் பெட்டி / செங்கல்பட்டு / செங்கல்பட்டு: புகார் பெட்டி; எல்லையம்மன்கோவில் பஸ் நிறுத்தத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்
செங்கல்பட்டு: புகார் பெட்டி; எல்லையம்மன்கோவில் பஸ் நிறுத்தத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்
எல்லையம்மன்கோவில் பஸ் நிறுத்தத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட எல்லையம்மன் கோவில் பகுதியில், பேருந்து நிறுத்தம் உள்ளது.ஓதியூர், முதலியார்குப்பம், நயினார்குப்பம் உள்ளிட்ட கிராம மக்கள், கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை, புதுச்சேரி போன்ற பகுதிகளுக்குச் செல்ல, இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துகின்றனர்.பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதி இல்லாததால், மதிய நேரத்தில் பேருந்திற்காக காத்திருக்கும் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் தண்ணீரின்றி கடும் அவதிப்படுகின்றனர்.எனவே, பேரூராட்சி நிர்வாகம் எல்லையம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.- அ.குமார், செய்யூர்.