/ புகார் பெட்டி / செங்கல்பட்டு / செங்கல்பட்டு: புகார் பெட்டி;திருப்போரூர் - இள்ளலுார் சாலை சந்திப்பு படுமோசம்
செங்கல்பட்டு: புகார் பெட்டி;திருப்போரூர் - இள்ளலுார் சாலை சந்திப்பு படுமோசம்
தி ருப்போரூர் - இள்ளலுார் சாலை சந்திப்பு வழியாக வெண்பேடு, காட்டூர், அம்மாபேட்டை, நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், இள்ளலுார் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு, தினமும் தண்ணீர் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து அதிகமுள்ள இந்த சந்திப்பில், சாலை கடுமையாக சேதமடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் செல்கின்றனர். நெடுஞ்சாலைத் துறையினர், இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - கே.பிரசாந்த், திருப்போரூர்.