/   புகார் பெட்டி    /  செங்கல்பட்டு  /   செங்கல்பட்டு: புகார் பெட்டி; பாதையை மறைக்கும் செடிகள் அப்புறப்படுத்துவது எப்போது?                      
செங்கல்பட்டு: புகார் பெட்டி; பாதையை மறைக்கும் செடிகள் அப்புறப்படுத்துவது எப்போது?
பாதையை மறைக்கும் செடிகள் அப்புறப்படுத்துவது எப்போது?
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஆத்துார் ஊராட்சி எல்லையம்மன் கோவில் தெரு, சன்னிதி தெருக்களின் சாலையோரம், செடிகள் வளர்ந்து வழியை மறைத்துள்ளன. இந்த செடிகளுக்குள் அதிக அளவில் குப்பை குவிக்கப்பட்டு வருகிறது. இதனால், அவ்வழியே பயணிப்போர், மூக்கை பொத்தியபடி செல்ல வேண்டியுள்ளது. மேலும் பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் உறைவிடமாகவும், இந்த இடம் மாறிவருகிறது. இங்கு வளர்ந்துள்ள செடிகளை அகற்றி, பாதையை உள்ளாட்சி நிர்வாகம் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். - சுந்தரி சுப்ரமணியன், முன்னாள் ஊராட்சித் தலைவர், ஆத்துார்.