உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / செங்கல்பட்டு / புகார் பெட்டி : மின் மோட்டார் பழுது குடிநீர் தட்டுப்பாடால் அவதி

புகார் பெட்டி : மின் மோட்டார் பழுது குடிநீர் தட்டுப்பாடால் அவதி

செங்கல்பட்டு மாவட்டம், வார்டு 9க்கு உட்பட்ட கலைஞர் கருணாநிதி தெருவில், 2019ல், 5,000 லி., கொள்ளளவு உள்ள சிறு குடிநீர் தொட்டியும், அதன் அருகில் ஆழ்துளைக் கிணறும் அமைக்கப்பட்டது.ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மின் மோட்டார் வாயிலாக நீர் உறிஞ்சி தேக்கப்பட்டு, 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் நடைபெற்று வந்தது.கடந்த இரு மாதங்களுக்கு முன், மின்மோட்டார் பழுதானது. இதுவரை, அது சரி செய்யப்படவில்லை.இதனால், 80க்கும் மேற்பட்ட குடும்பத்தார் குடிநீரின்றி, கடைகளில் விற்கப்படும் குடிநீர் கேன்களை வாங்கி, பயன்படுத்தும் நிலை உள்ளது. தற்போது கோடை காலம் என்பதால், குடிநீர் பயன்பாடு அதிகரித்துள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, மின் மோட்டார் பழுதை நீக்கி, பகுதிவாசிகளின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஆர்.பரமேஸ்வரி, கே.கே.நகர், செங்கல்பட்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி