புகார் பெட்டி : நீர்பெயர் சாலை வளைவில் வேகத்தடை அவசியம்
சித்தாமூர் அடுத்த நீர்பெயர் கிராமத்தில், மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு சாலையில் இருந்து வேட்டூர் செல்லும், 8 கி.மீ., துார தார்ச்சாலை உள்ளது.இதை மேல்வசலை, கீழ்வசலை, நீர்பெயர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர்.நீர்பெயர் கிராமத்தில் உள்ள குளம் அருகே, அபாயகரமான சாலை வளைவு உள்ளது.இங்கு வேகத்தடை இல்லாததால், வேகமாக வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வரும் வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றன.எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலை வளைவுப் பகுதியில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- தே.கருணாகரன்,ஒரங்காவலி.