புகார் பெட்டி பஸ் நிறுத்தம் அருகே கழிவுநீர் தேங்குவதால் அவதி
கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரே, செங்கல்பட்டு - தாம்பரம் மார்க்கத்தில், ஜி.எஸ்.டி., சாலையில் பேருந்து நிறுத்தம் உள்ளது.ஒரு மணி நேரத்திற்கு 500க்கும் மேற்பட்ட பயணியர் பயன்படுத்தும் இந்த பேருந்து நிறுத்தம் அருகே, கடந்த இரண்டு ஆண்டுகளாக, 10 அடி அகலம், 100 மீ., துாரத்திற்கு கழிவுநீர் தேங்கி நிற்கிறது.மழை பெய்யும் போது, தண்ணீர் தேங்கும் பரப்பு அதிகமாகி, பேருந்திற்காக காத்திருக்கும் பயணியர் அவதிப்படுகின்றனர்.முக்கிய பேருந்து நிறுத்தமான இங்கு கழிவுநீர் தேங்காமல் இருக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எம்.மகேஸ்வரி,3வது வார்டு, ஊரப்பாக்கம்.