உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / செங்கல்பட்டு / புகார் பெட்டி டீ கடை எதிரே ஆக்கிரமிக்கும் வாகனங்களால் இடையூறு

புகார் பெட்டி டீ கடை எதிரே ஆக்கிரமிக்கும் வாகனங்களால் இடையூறு

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ரவுண்டானாவில் செங்கல்பட்டு சாலை, மாமல்லபுரம் சாலை, கேளம்பாக்கம் சாலை என, பல்வேறு இடங்களுக்குச் செல்லும் கூட்டுச்சாலை உள்ளது. இங்கு செயல்படும் டீ கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், போக்குவரத்திற்கு இடையூறாக தங்களின் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துகின்றனர்.குறிப்பாக, இரவு நேரத்தில் மட்டும் கடைக்கு வருபவர்கள், கடை எதிரே இருசக்கர வாகனங்களை நிறுத்துவதால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, இரவு நேரத்தில் ஆய்வு மேற்கொண்டு, அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.- என்.பாண்டி,திருப்போரூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை